பாரதி பக்கம்
பொறுமையும், நிதானம் கொண்ட பெண்மணியா நீங்கள்?. கொஞ்சமாக படம் வரையத் தெரியுமா...பிறகென்ன. பெரும் பெரும் ஹோட்டல்கள் முதல் சிறுஇல்லங்கள் வரை உங்கள் சித்திரம் அலங்கரிக்கும். அதுவும் தத்ரூபமான ஓவியமாக அது இருக்கும்.
எப்படி என்-று கேட்-கி-றீர்-க-ளா..?
சில சதுர அடிக் கண்ணாடி, கொஞ்சம் ஆயில் பெயிண்ட், மார்க்கர் பேனா. இவ்வளவு போதும். அதற்குப் பிறகு உங்கள் கைவண்ணத்தைப் பொறுத்து 5 ஆயிரம்ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வீட்டிலிருந்தே சம்பாதித்து அசத்தலாம்.
உங்கள் எண்ணத்தை வண்ணத்தில் ஓவியமாகத் தீட்டினால், வெற்றி நிச்சயம். இந்த முயற்சிக்குப் பயிற்சி அளித்து வருகிறார் கோவையைச் சேர்ந்த லட்சுமிமணியன்.
இவர் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து தனது "கிளாஸ் பெயிண்டிங் கலை"யைக் கல்லூரி மாணவ, மணவியர் உள்பட இல்லத்தரசிகளுக்குக் கற்றுக்கொடுத்து வருகிறார். சில பெயிண்டிங் நிறுவனங்கள் இவரை அழைத்து சிறப்பு வகுப்புகளை நடத்தியுள்ளன.
கோவையைப் பொறுத்தவரை, காலையில் ஆரம்பித்து மாலை வரை அயராது வகுப்புகளை நடத்தி வருகிறார் லட்சுமி மணியன். காலையில் அவிநாசிலிங்கம்மகளிர் பல்கலைக் கழகம் உட்பட கல்லூரிகளில் பாடம் நடத்துகிறார்.
மாலையில் இல்லத்தரசிகளுக்கு பாடம் நடத்துகிறார். வாரத்தில் விடுமுறை நாட்களையும் வேஸ்ட் செய்வதில்லை. எப்போதும் பிஸியாக இயங்குகிறார்.
கண்ணாடிகளின் பின்பகுதியில் வரைந்த ஓவியம், முன் பகுதியில் அட்டகாசமான ஒரு பிரதிபலிப்பை காட்டுகிறது. இவற்றிலும் ஒளிரும் கற்களைப்பதித்தால், அசத்தலான அழகை வெளிப்படுத்துகிறது.
அழகிய இவரது ஓவியங்கள் ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. இந்த கண்ணாடி ஓவியங்கள் புகழ் பெற்ற தஞ்சைஓவியங்களைப் போன்றே நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.
பெரும் ஹோட்டல் முதல், சிறு இல்லங்கள் வரை பலரும் தங்கள் வீடுகளில் ஓவியங்களை மாட்டி அழகு பார்க்கத் தவறியதில்லை. இவரிடம் குறைந்தவிலைக்குப் பெறப்படும் கண்ணாடி ஓவியங்கள் அனைத்தும் வேறு இடங்களுக்குச் செல்லும் போது மதிப்பு கூடி விடுகிறது.
வீடுகளில் மட்டுமல்ல, அலுவலகங்களிலும் மேஜை மீது வைக்கப்படும் கண்ணாடியிலும் அழகாகப் பிரதிபலிக்கிறது இவரது ஓவியங்கள்.
வீட்டில் இருந்து கொண்ட சம்பாதிக்க இதுவும் ஒரு வழி !
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications