ஆர்ட் கால-ரி

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் 73 கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு "மிஸ் ஹார்மோனி 2000 நிகழ்ச்சியைநடத்தினர். இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் படைத்த கவிதைத் தொகுப்பில் முதல்பரிசு பெற்ற கவிதை இது:

முதல் பரிசை வென்ற கவிதையாக கொங்குநாடு கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் தி. விஜய்குமார் எழுதிய கவிதை தேர்வு பெற்றது.

அந்த கவிதை:

மேக விழியில் கண்ணீர்த் துளிகள்

மேக மங்கை தன்

கண்ணீர் கொலுசுகளை

கழற்றி நம் கையில்

தந்து விட்டு

கறுப்புச் சுவடுகளை

காய வைக்கிறாள்

பின்

காலடிச் சுவடுகள் தெரிய

காணாமல் போகிறாள்

கனவுகளோடு அவளும்

கவிதைகளோடு நிலவும்

காதல் கொண்டு

கலவி புரிந்ததால்

கர்ப்பான அவள்

தண்ணீர் சிசுக்களை

தரைக்கு பிரசவிக்கிறாள்!

மண்ணில் இருந்து

விண்ணைப் பார்க்கும்

மலர் வர்க்கங்களே

உமது காலடி செழிக்க

இதோ மேக விழியில்

கண்ணீர்த் துளிகள்!

மேக மகள்

மண்ணின் அழுக்கை

கண்ணீரில் கழுவுகிறாள்

மனதின் அழுக்கை

யார் வந்து துடைப்பாரோ?

சுயநலவாதிகளும்

சூன்ய கழுகுகளும்

சூறையாடி விட்டதால்

என் கண்ணீரும்

வற்றி விட்டது

காவிரியும்

வற்றி விட்டது

உன் அழுகை நிரப்புமா- இந்த

இரண்டு கலங்களையும்?

பகலைப் பேச்சில்

தொலைத்து விட்டு

இரவை கனவில்

தொலைத்து விட்டு

இளைமையை

சிகெரெட் புகையில்

தொலைத்துக் கொண்டிருக்கும்

இளைஞனைப் பார்த்து

மேக விழியில் கண்ணீர்த் துளிகள்!

உனது கண்ணீர்த் துளிகளை

சுவைக்க அவர்கள்

தயாராக இல்லை

வெளிநாட்டு மதுவையும்

உள்நாட்டு மாதுவையும்

மட்டுமே உண்மையில்

நேசிக்கின்றனர்!

மேகவிழியில் கண்ணீர்த் துளிகள்

இடியின் அடி வாங்கி

மின்னல் சூடுபட்டு

ஏன் இந்த வேதனை

யார் செய்து போதனை

ஓ!

அதுவா

(விண்) நீ அழுகாமல்

மண் சிரிக்காது

நீ மெளனித்தால்

மண் பேசாது

மேகமே

உன் கண்ணீர்த் துளிகள்

என் வாசல் வருகையில்

என் சாரங்கள் கூட

சங்கீதம் பேசுகின்றன

தவளை கூட

தாளம் பிடிக்கிறது

மேகக் கண்ணீருக்கு

மோகமாய் நன்றி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+