பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
கண்ணனுக் கேமுதல் அர்க்கியம் - அவர்
காட்டினர் என்று பழித்தனை - எனில்
நண்ணும் விருந்தினர்க் கன்றியே - நம்முள்
நாமுப சாரங்கள் செய்வதோ? - உறவு
அண்ணனும் தம்பியும் ஆதலால் - அவர்
அன்னிய மாருமைக் கொண்டலர் - முகில்
வண்ணன் அதிதியர் தம்முளே - முதல்
மாண்புடை யானெனக் கொண்டனர். (79)
கண்ணனுக் கேயது சாலுமென்று - உ.யர்
கங்கை மகன்சொலச் செய்தனர் - இதைப்
பண்ணரும் பாவமென் றெண்ணினால் - அதன்
பார மவர்தமைச் சாருமோ? - பின்னும்
கண்ணனை ஏதெனக் கொண்டனை? - அவன்
காலிற் சிறுதுக ளொப்பவர் - நிலத்
தெண்ணரும் மன்னவர் தம்முளே - பிறர்
யாரு மிலை யெனல் காணுவாய். (80)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications