பரதம்
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
சொல்லின் நயங்கள் அறிந்திலேன் - உனைச்
சொல்லினில் வெல்ல விரும்பினேன் - கருங்
கல்லிடை நாருரிப் பாருண்டோ? - நினைக்
காரணங் காட்டுத லாகுமோ? -என்னைக்
கொல்லினும் வேறெது செய்யினும் - நெஞ்சில்
கொண்ட கருத்தை விடுகிலேன் - அந்தப்
புல்லிய பாண்டவர் மேம்படக் - கண்டு
போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன். (90)
வாது நின்னோடு தொடுக்கிலேன் - ஒரு
வார்த்தை மட்டுஞ்சொலக் கேட்பையால் - ஒரு
தீது நமக்கு வாராமலே - வெற்றி
சேர்வதற் கோர்வழி யுண்டு காண்! - களிச்
சூதுக் கவரை யழைத்தெலாம் - அதில்
தோற்றிடு மாறு புரியலாம் - இதற்
கேதுந் தடைகள் சொல்லா மலே - என
தெண்ணத்தை நீகொளல் வேண்டுமாம். (91)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications