பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
திரிதராட் டிரன் செவியில் - இந்தத்
தீமொழி புகுத லுந் திகைத்து விட்டான்
பெரிதாகத் துயர் கொணர்ந்தாய் - கொடும்
பேயெனப் பிள்ளைகள் பெற்று விட்டேன்
அரிதாக் குதல்போலே - அமர்
ஆங்கவ ரொடுபொரல் அவலம் என்றேன்
நரிதாக் குதல்போலாம் - இந்த
நாணமில் செயலினை நாடுவனோ? (92)
ஆரியர் செய்வாரோ- இந்த
ஆண்மையிலாச் செயல் எண்ணுவரோ?
பாரினில் பிறருடைமை - வெஃகும்
பதரினைப் போலொரு பதருண்டோ!
பேரியற் செல்வங்களும் - இசைப்
பெருமையும் எய்திட விரும்புதியேல்
காரியம் இதுவாமோ? - என்றன்
காளை யன்றோ? இது கருதலடா! (93)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications