பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
பாணர்கள் துதிகூற - இளம்
பகலவன் எழுமுனர்த் துயிலெழுந் தார்
தோணலத் திணையில்லார் - தெய்வந்
துதித்தனர் செய்யபொற் பட்டணிந்து
பூணணிந் தாயுதங் கள் - பல
பூண்டுபொற் சபையிடப் போந்தனரால்,
நாணமில் கவுரவரும் -தங்கள்
நாயக னொடுமங்கு வீற்றிருந் தார். (162)
வீட்டுமன் தானிருந் தான் - அற
விதுரனும், பார்ப்பனக் குரவர்களும்
நாட்டுமந் திரிமாரும் - பிற
நாட்டினர் பலபல மன்னர்களும்
கேட்டினுக் கிரையாவான் - மதி
கெடுத்துரி யோதனன் கிளையினரும்
மாட்டுறு நண்பர்களும் - அந்த
வான்பெருஞ் சபையிடை வயங்கி நின்றார். (163)
(அடுத்தது பாண்டவர் சபைக்கு வருதல்)












Click it and Unblock the Notifications