கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
திடீர்னு தம்பியப் பாத்த வெரிச்சில அக்கா ஒரு பெருமூச்சு விட்டு சிரிச்சா அதோட அவ உசுரு போயிருச்சு.
அங்க இருந்த மச்சினன் அட பாவிகளா அக்காளுந் தம்பியும் சேந்து எங் குடியக் கெடுத்துட்டீகளேன்னுசொல்லி, பிறந்த பச்செ மண்ணெ தூக்கி மச்சினன் கையில கொடுத்து, தொலைஞ்சி பொ உங்க ஆவியேவேண்டாம் ன்னு சொல்லி விரட்டிட்டாம்.
பச்சைப் பிள்ளைய ஊருக்குத் தூக்கிட்டு வந்த தம்பிக்காரன் அத கண்ணுங் கருத்துமா வளக்கான். அந்தப்பிள்ளையும் அழகா வளந்திருச்சி.
வளந்த பிள்ள, தாய் மாமனுக்கு அப்படி ஓடி ஓடி ஒத்தாச பண்றா. மாமன் எள்ளுங்கமுன்ன இவ அவம்முன்னாடி எண்ணெயா நிக்கா.
இப்பிடியே கொஞ்ச நா கழியவும்,
இவளும் பெரிய பொம்பளையா வந்துட்டா.
மாமங்காரனுக்கு வயசாயிட்டே வருது.
இவள ஒரு நல்ல இடமாப்பாத்து கட்டிக்கொடுக்கனுமேங்கிற கவலெ வேற.
கண்ணுக்குள்ள வச்சி வளத்த பிள்ள. ஆத்தா இல்லாத பிள்ள. எவனும் தட்டுவாலி தராவலி கைக்குள்ளபோயி சிச்கிக்கிட்டு அலைஞ்சிருமோன்னு தவிச்சிக்கிட்டிருக்காம்.
இவளும், மாமன் நமக்காகவே கலியாணம் காச்சி முடிக்காம இருந்தாரே. இந்த வயசானகாலத்துல இவர ஒத்தீல விட்டுட்டு நம்ம புருசங்கூட போயி எப்பிடி காலந் தள்ளப் போறேம்ன்னுநினைக்கா.
ஆத்தங்கரையில ஒரு நா ஒருத்தர ஒருத்தர் இப்பிடி நினைச்சி இந்தக்கடே சிக்கும். அந்தக் கடேசிக்கும்உக்காந்துக்கிட்டு கண்ணீரு விடுதாக.
அப்ப, ஒரு சாமியாரு அந்த வழியா வந்தவரு ஆத்துக்குள்ள இறங்கி முகங்கழவப் போனவரு கண்ணீரோடஉக்காந்திருக்க இவளப் பாத்துட்டு,
எதுக்காத்தா இப்பிடி ஒத்தீல உக்காந்து அழுதுக்கிட்டிருக்க ன்னு கேட்டாரு.
இவளும் மாமனப்பத்திய விவரத்த எல்லாஞ் சொன்னா.
எம் மாமன விட்டுப் போவ எனக்கு மனசில்ல. என்ன ஒரு கிழடியா ஆக்கிருங்க. நா எம்மாமனுக்கே வாக்கப் பட்டுக்கிடுதேம் ன்னு சாமியாரு கால்ல விழுந்து கெஞ்சுதா.
சரீன்னு சொல்லி சாமியாரும் கிழடி ஆக்கீட்டு ஆத்துக்கு இந்தப் பக்கம் வந்தாரு.
அங்க மாமங்காரன் அழுதுக்கிட்டு உக்காந்திருக்காம்.
என்னப்பா என்ன விவரம் ன்னு சாமியாரு கேட்டாரு.
எல்லா விவரத்தையும் சொல்லி, என்னெ இளந்தாரியா ஆக்கிருங்க ன்னு சொல்லி கால்லவிழுந்தாம்.
சாமியாரு மனசுக்குள்ள சிரிச்சிக்கிட்டு சரீப்பான்னு சொல்லி அவன ஒரு நல்ல இளந்தாரியாஆக்கிட்டாரு.
இவனுக்கு சந்தோசம் பொறுக்கல !
ஒரே ஓட்டம் ; வீட்டுக்கு ஓடுனாம். அங்க போயிப் பாத்தா, அங்க ஒரு கிழவிஉக்காந்துக்கிட்டிருக்கா.
நீ யாராத்தா என்ன விவரம்ன்னு விசாரிச்சா, நடந்ததெ எல்லாம் சொன்னா. அய்யோ மோசம்போச்சேன்னு ரெண்டு பேரும் அந்த சாமியாரத்தேடி ஆத்துப்பக்கம் போனாக சாமியாரப் பாக்க.
எங்க தேடியும் சாமியார்க காங்கல.
என்ன செய்யன்னும் தெரியல. சரி, நமக்குப் போட்டது கிடைச்சிருக்குன்னு மனசத் தேத்திக்கிட்டு சரிஆத்தா நீ போயி வீட்டுல இருந்துகொ. நா எங்கிட்டும் போறேன்ன்னாம்.
எங்க போவீரூன்னு கேட்டதுக்கு. நா சாமியாரப் போறேம் காட்டுக்குன்னாம்.
நானும் சாமியாரா ஒம்ம கூட வாரெம் ன்னு அவங்கூடவே வனத்துக்கு போயிட்டாங்களாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications