கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
ஒரு காட்டுல ஒரு நாகப்பாம்பு இருந்தது. ரொம்ப சோம்பேறி, இரை எடுக்கப் போகாது. பாக்க அழகா, ரொம்ப நல்லா இருக்கும். இதத் தேடிசாரைப் பாம்புக வரும். அதுக வரும்போதெல்லாம் இந்தப் பாம்புக்கு பிரியமா இரை கொண்டாந்து தந்து, இது கூடப் பேசிப் பழகி நல்லாப் பொல்லாஇருந்துட்டுப் போவும்.
நாகப் பாம்பு முட்டையிட்டு அடைகாக்கும். அடை முடிஞ்சி, முட்டைகள்ளயிருந்து குட்டிக வரும். அப்பிடி வர வர அந்த குட்டிகள் எல்லாத்தையும் ஒவ்வொண்ணாப்பிடிச்சி விழுங்கிடும்! ஒத்தக் குட்டி கூட மிஞ்சாது.
மற்ற பாம்புகளெல்லாம் அடைகாத்து குட்டிகளோட வெளியில வரும்போது மெலிஞ்சு தெரியும். இந்த பாம்பு மட்டும் குட்டிகள எடுத்து முழுங்கிட்டு, பசிஇன்னதுன்னே தெரியாம தள தளன்னு மின்னாப்பா இருகும்.
பாத்தா ஆசை வரும்!
இப்பிடி பாக்க வார மத்த பாம்புக படுத்தே கிடந்தா உடம்பு என்னத்துக்காகும். எங்க கூட வா. வயலுப் பக்கம் போவோம் ; எலியப் பிடிப்போம்.குளத்துப் பக்கம் போவோம் ; தவளையைப் பிடிப்போம்ன்னு கூப்புடும்.
ஒண்ணத்துக்கும் அசையாது. தேடிவர சாரைப் பாம்புக கொண்டார விருந்துச் சாப்பாட சாப்பிட வேண்டியது. அதுகளோட பேசி உல்லாசமா இருக்க வேண்டியது.இப்பிடியே அதொட பொழுது கழிஞ்சிக்கிட்டிருந்தது.
ஒரு நா, ஈசன் சிவனார் இந்த நாகப் பாம்பெ தற்செயலாப் பாத்தாராம், அடாடா என்ன அழகு என்ன அழகு. தூக்கி கழுத்துல போட்டுக்கிடலாம்போலிருக்கேன்னு எண்ணம் வந்துட்டதாம்.
உடனே, நாகப்பாம்பு முட்டை இட ஆரம்பிச்சி அடைகாக்க ஆரம்பிச்சது.
நாள் ஆக ஆக அதுக்கு பசி தாள முடியல. எப்ப குட்டிக வெளிய வரும் எடுத்து ஒவ்வொண்ணா முழுங்குவம்ன்னு இருக்கு.
நாள் ஆயிக்கிட்டே போகுது. குஞ்சுக முட்டைவெடிச்சி வெளிய வரமாட்டேங்கு. முதல் முட்டையப் பாக்கு. அதுல இருந்துதாம் முதக்குட்டி வெளிய வரணும். ஒருஅரவத்தையும் காணம். பசி குடலைப் பிடுங்குது.
தேடி வர சாரைப் பாம்புகளையும் காணம். பசியோட தனீயா கஸ்டப்படுது. பசி தாங்க முடியல. இனி முட்டைகளையே எடுத்து முழுங்கிற வேண்டியதுதாம்ங்கிறநிலைமைக்கு வந்த போதுதாம் ஒரு அதிசயம் நடந்தது!
ஒரே சமயத்துல எட்டு மூட்டைகளும் வெடிச்சது. முட்டைகளிலிருந்து பாம்புக் குட்டிக வரல்ல ; எட்டு முட்டைகள்ல இருந்தும் எட்டு அட்ட காளிகள்வெளிய வந்ததாம். அப்பிடி வெளிய வந்த சமயம் கண்ணைப் பறிக்கிற ஒளி வானத்துக்கும் பூமிக்குமா மின்னிச்சாம். மின்னல் கொட்டு முழுங்கிச்சாம், இடி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications