கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்

Subscribe to Oneindia Tamil

மரங்களெல்லாம் சந்தோசமா ஆடிச்சாம், காத்து. வானத்திலயிருந்து தீர்த்தம்கொட்டிச்சாம்; மழை.

உலகமெல்லாம் கொண்டாட்டமா இப்பிடி இருக்கிறப்பொ இந்த நாகத்துக்கு வயிறுஉலையா கொதிக்கி. பசி உச்சந்தலைய பிடிச்சி இழுக்கு. தாங்க முடியாம் ஓன்னுபுரண்டு கிடந்து அழுது.

நாகம் இப்பிடி விழுந்து அழும் சத்தங்கேட்டு எல்லாப் பாம்புகளும் வந்து வேடிக்கைபாக்குதாம். அதுல ஒரு மூத்த பாம்பு மட்டும், ஏம் இப்பிடி அழுவுர. நாங்கசொன்னப்ப எல்லாம் எனக்கு அந்த ஈசன் படி அளப்பாம் ன்னு சொன்னயில்ல. அந்தஈசம் கிட்டயே பொ. என்னோட பசிக்கு என்ன சொல்லப் போரென்னு கேளு ன்னுசொல்லவும் இந்த நாகம் அநத ஈசன் இருக்கிற இடத்துக்கே போனதாம்.

இதோட வரத்தப் பாத்த ஈசனுக்கு சிரிப்பு அள்ளுதாம்! உலகத்துல இருக்க எல்லாஉசுருகளுக்கும் வயித்துக்கு இருக்கையில யாரும் நம்மள நினைக்க மாட்டாங்க.வயித்துக்கு என்னாச்சும்ன்னா நம்மளத் தேடி வர்றாங்கன்னு நினைச்சிசிரிச்சிக்கிட்டாராம்.

ஈசன் இருக்கிற இடத்துக்கு வந்ததும் நாகம் தலையத் தூக்கி பாத்ததாம். அதுக்கு ஒரேஆச்சர்யம். இது அடைகாத்த முட்டைக்குள்ளயிருந்து வந்த அந்த அட்ட காளிகஈசனுக்குப் பக்கத்துல இருக்காங்களாம்!

அதுகளைப் பாக்கவும் நாகத்துக்கு அழுகையும் ஆங்காரமும் கூடிட்டதாம், அப்பிடிஅழுவுதாம்.

தான் ஆசைப்பட்ட அந்த நாகம் வந்து காலடியில விழுந்து அழுகிறதைப் பாத்தஈசனுக்கு இரக்கம் வந்துட்டதாம். குனிஞ்சி அதோட நாடியத் தொட்டு எதுக்கு இப்பிடிக்கண்கலங்குதேன்னு ஆதரவாக் கேட்டதும் நாகம் எல்லா விவரங்களையும் சொல்லி,இந்தப் பசிய என்னால தாங்க முடியலயேன்னு அழுதுதாம்.

பிரியத்தோட அந்த நாகத்தை ஈசனார் தூக்கி நாந்தாம் இந்த அட்ட காளிகளஅனுப்பிச்சேம் ஒன்ன வரவழைக்க. இனி ஒனக்கு பசியே கிடையாதுன்னு சொல்லிஅந்த நாகத்த ஆசையா எடுத்து கழுத்துல போட்டுக்கிட்டாராம்.

அந்நாளையிலயிருந்து தாம் சிவனார் கழுத்துல நாகம் குடியிருந்து வருதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+