கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
""டோய் டோய் இன்னிக்கு நாம சண்டை விளையாட்டு ஆடலாமா?"" ன்னு கேட்டுது.
""என்னது சண்டை விளையாட்டா வேண்டாம் பா... நா வல்லெ""
""அட பயந்தாரீ ! பயந்துட்டியா; சும்மா ஒரு இதுக்குத்தாண்டோய். வெறும் விளையாட்டுத்தானெ"".
""வேணாம் வேணாம்; நா அந்த ஆட்டைக்கெல்லாம் வரமாட்டேம்பா... என்ன விட்டுரு"".
""அப்ப இனி ஒங்கூட நாம் பேசவே மாட்டேம்""ன்னு முகத்த நரி உம்முனு வச்சிக்கிட்டது.
அந்த மூஞ்சியப் பாத்ததும் முசக்குட்டிக்கு சிரிப்பு வந்துட்டது; ஆனா சிரிக்கல.
""கொஞ்சூண்டு சிரிப்பியாம் அதெ நாம் பாப்பனாம்"".
நரி சிரிக்கிறாப்பல தெரியல. கூடக் கொஞ்சம் உம்முனு வச்சிக்கிட்டு கண்ணயும் மூடிக்கிட்டு மூஞ்சிய தூக்கிவச்சிக்கிட்டது.
சேக்காளி இப்பிடி இருக்கது முசக்குட்டிக்கு சங்கடமா இருந்துது.
""சரி சரி; ஒனக்கு இப்ப சண்டை விளையாட்டு ஆடணும் ஆடுவம்""
மூஞ்சியில ஒரு களை வந்துட்டது நரிக்கு.
முசக்குட்டி கேட்டது:
""நம்மால விளையாட்டுக்குக் கூட சண்டை போட முடியாதெ. என்ன காரணத்த வச்சி சண்டையத் தொடங்குறது?""
""அது ஒண்ணுங் கஷ்டமில்ல; சின்ன விசயத்துக்குக் கூட சண்டை போடலாம் ரொம்ப லேசு""
""அப்பிடியா!"" முசக்குட்டிக்கு ஆச்சரியம்.
நரி போய் சின்னக் கல் எடுத்துட்டு வந்தது. அதை ரெண்டு பேருக்கும் இடையில வச்சி,
""இப்ப நாஞ் சொல்லுவெம் இது என்னோட கல்லுன்னுட்டு.
நீ சொல்லனும். கெடையாது இது என்னோட கல்லுன்னுட்டு.
கிடையவே கிடையாது இது என்னோட கல்லுதாம்.
இப்பிடி மாறி மாறி நாம சொல்லிக்கிடணும். பலமாச் சொல்லணும். கோவமாச் சொல்லணும். பதிலுக்கு ஆங்காரமாசொல்லணும். அப்ப நமக்குள்ள சண்டை வநதுரும்!""
சீ; என்னா விளையாட்டு இது. சாவஞ்செத்த விளையாட்டு. யோசிச்சிக்கிடடே இருந்தது முசக்குட்டி.
விளையாட்டெத் தொடங்க முசக்குட்டி பண்ற தாமதம் நரிக்கு மனசுக்குள்ள எரிச்சலும் கடுப்புமா வருது. ஆனாலும்,அவசரப்பட்டு காரியத்த கெடுத்துறப் படாதேன்னு நல்லதனமா இருந்தது.
ஆரம்பிக்கலாமான்னு பிரியமா கேட்டது நரி. இஷ்டமில்லாம சரீன்னு தலையாட்டுது முசக்குட்டி.
விளையாட்ட ஆரம்பிச்சது நரி.
""நல்லாப்பாத்துக்க; இது என்னோட கல்லு""
""எப்பிடிச் சொல்றெ ஒன்னோடதுன்னு""
""எப்பிடியும் சொல்லுவேம் இது என்னோட கல்லுதாம்""
""அதெப்பிடி; ஒன்னோட கல்லுன்னா அதுக்கான காரணத்த சொல்லனுமெ""
""அறிவு இருக்கா ஒனக்கு; அதெ நாந்தானெ தூக்கீட்டு வந்தேம்; பாத்துட்டுத்தானெ இருந்தெ?
ஆமாம் நீதாம் தூக்கிட்டு வந்தெ; பாத்தனென்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு, நரி காதுல ரகசியம் சொல்ராப்ல""அவசரமா எனக்கு "இது வருது நொடியில பொயிட்டு வந்துருதேம்""ன்னு ஓடுனது.
சிரிப்பு வந்துட்டது நரிக்கு சீக்கிரம் வந்துருன்னு சொல்லி, ""கொஞ்சமா தின்னு தொலைக்கனும்"" ன்னு சொல்லிகிட்டேகாத்திருந்தது.
முசக்குட்டி போயிக்கிட்டே இருந்தது; நரி காத்துக்கிட்டே இருந்தது.
திரும்பி வரவே இல்ல அந்த முசக்குட்டி .
காட்டை விட்டே போயிட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications