For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்ட் கால-ரி

By Staff
Google Oneindia Tamil News

Postman-Olden Timesஇப்போது கம்ப்யூட்டர் மூலம் ஈ மெயில் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.

கத்தி, ஈட்டி பாதுகாப்புடன் "மெயில் அனுப்பிய காலத்தை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா.

ஆதிகாலத்திலிருந்து இன்றைய எலக்ட்ரானிக் யுகம் வரை தபால் தொடர்பு எப்படி வளர்ந்திருக்கிறது என்பதைவிளக்க ஆகஸ்ட் 3 முதல் 6-ம் தேதி வரை கோயம்புததூரில் தபால் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அரசு சார்பில்அமைக்கப்பட்டிருந்த "காலரி அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டது.

இதில் இடம் பெற்ற ஒரு "ஈட்டி தபால்காரர் படம், அந்தக் கால தபால்காரரைப்பற்றிக் கூறியது. கையில் ஈட்டியுடன்,பெட்டியில் தபாலுடன் முண்டாசு கட்டிக் கொண்டு பல மைல்கள் நடந்தும், குதிரையின் மீதும் பல நாட்கள் பயணம்செய்து தபாலை உரியவரிடம் சேர்ப்பித்து வந்தனர் இந்த தபால்காரர்கள்.

பல மலைகளைக் கடக்கவும், ஆறுகளை நீந்திக் கடக்கவும், இரவு பகல் நடக்கவும், ஒரு விளக்குடன் செல்லும் இந்ததபால்காருக்குத் துணை "ஈட்டி தான். இந்த ஈட்டியைப் பயன்படுத்தி மிருகங்களிடமிருந்து பாதுகாப்பாகவும்,எதிரிகளிடமிருந்து தப்பியும், திறமையாக உரியவரிடம் தபாலைச் சேர்க்க அவர் கடும் சிரமத்திற்குள்ளாகவேண்டியிருந்தது.

ஆனால், இப்போது, எந்த நாடாக இருந்தாலும், ஊராக இருந்தாலும் நொடிப் பொழுதில் ஈ மெயில் சென்றடைந்துவிடுகிறது. அதுவும் பாதுகாப்பாக உரியவர் மட்டுமே பார்க்கும் வண்ணம் சென்று விடுகிறது.

"என்ன தான் இருந்தாலும், தபால் எழுதுவது ஒரு கலை. இந்தக் கலை அம்சம் குறைந்து வருகிறது. உள்ளத்தைத்தொடும் வகையில் (பெர்சனல் டச்!) தபால் எழுதுவதிலும், அதைப் பெறுவதிலும், ஆர்வமாகப் படிப்பதிலும் ஒருசுவை இருந்தது என்னவோ உண்மை தான்.

ஆனால், இப்போது ஆவலாகக் காத்திருக்கக் கூட தேவையில்லை. உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசி விடலாம். இதில், எந்த உணர்வுமே இல்லாமல் போய்விடுகிறது என்கிறார் தமிழக மேற்கு மண்டலத் தபால்அதிகாரி விமலா குமார்.

இந்தியாவிலேயே அதிக நெட்வொர்க் கொண்ட ஒரு அமைப்பு தபால் துறை தான்.

இந்த தபால் அலுவலகங்களில் இப்போது ஈ மெயில் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

எனவே கூடிய விரைவில், தபால் அலுவலகங்கள் எல்லாம் "ஈ மெயில் நிலையங்களாக மாற்ற அரசு முயற்சிமேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்தியக் குக்கிராமங்களில் கூட தகவல் தொழில்நுட்பப் புரட்சி துவங்கஇருக்கிறது.


ஆர்ட் காலரியை அலங்கரித்த முந்தைய கட்டுரை:

மான்கள் மான்களைக் கட்டிக் கொண்டால்...!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X