கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
மலைக்கு விறகு தேடிப் போனாங்க. இவம் மாத்திரம் வீட்டில இருந்தாம். அப்ப அந்தபெரியவங்க பிள்ளைகள்ட இன்ன இன்ன மாதிரி சங்கதின்னு விவரத்த சொன்னாங்க.
பெத்தவஙக சொன்னத கேட்டதும் அந்தப் பொண்ணுகளுக்கு சந்தோசம் பொறுக்கல.ஆளு நல்ல ஆளு. பாக்கவும் குணத்துலயும் தங்கக் கட்டி. நாள் முழுக்கன்னாலும் கஞ்சிகுடிக்காம அவர பாத்துக்கிட்டே இருக்கலாம்ன்னு ஒவ்வொருத்தியும் தனுக்குத்தாம்அவரு புருசனா வரணும்னு ஆசைப்பட்டாங்க
ஒவ்வொருத்தியும் ஆத்தாள தனியாக் கூப்பிட்டு,
ஆத்தா ஆத்தா, அவரப் பாத்தா நாளையிலயிருந்து நா அவரு நெனப்பாவேஇருக்கேம். எனக்குக் கஞ்சி இறங்கல. கண்ணு ரெண்டும் பொறுந்தல. மூச்சு பறியல.மோகந் தெளியல. என்ன அவருக்கு கட்டி வைக்காட்டா என் உசுரு உடம்புல தங்காது,இப்படிச் சொல்லுதா ஒருத்தி.
இன்னொருத்தி சொல்லுதா, ஆத்தா ஆத்தா, உழவுப் புழுதிக்குள்ள அவரு ஒரு கால்தடம் பாத்தேம். பாத்த நேரத்திலே தந்தேனே என் உசுரென்னு பாடுதா.
இன்னொருத்தி, ஆத்தா ஆத்தா இடதுபக்கம் சேக்கு ஒதுக்கி அவரு ஈக்கி கம்பிவேட்டிகட்டி எட்டு வச்சி நடந்தாரோ என்ன நானு மறந்தேனோன்னு பாடுதா.
இன்னொருத்தி, இளைய மக பேச்செ ஏறெடுத்து கேட்டுகோங்க கடைசி மக பேச்செகாது கொடுத்து கேட்டுக்கோங்க இதே புருசம் வேணுமின்னு ஏந்திழையாதவமிருந்தேம் கோயிலுக்குப் போயி கும்பிட்டு வரங்கேட்டேம்ன்னு பாடவும்,ஆத்தாக்காரி விக்கி விறக்கிச் போனா!
இந்த அம்புட்டுக் கழுதகளும் அவம்பேர்ல மல அளவு உசுர வச்சிருக்காகளே நாஎன்னத்த பேசப் போறேம்னு மகுந்து பொயிட்டா.
இதென்ன பண்டம் பலகாரமா ஆளுக்கு இம்புட்டு பகிர்ந்து கொடுக்க, அப்பிடி என்னஇந்த பொட்டை களுதகளுக்கு ஆச வந்து அல்லாடுதுன்னு எல்லாரையும் கூப்பிட்டு,
வீட்டுக்கு மூத்தவளத்தாம் அவன் கட்டிக்கப் போறாம். மத்த மூணு பேரும் ஒங்கஆசைகள எல்லாம் அடக்கிக்கிட்டு, அக்கா புருஷன் உங்களுக்கெல்லாம் மச்சான்வேணும்ன்னு நினைச்சி, அவரு பேச்சக் கேட்டு அவரு ஏவுன வேலய செஞ்சிக்கிட்டமறுபேச்சுப் பேசாம இருக்கனும். அத விட்டுப்போட்டு, இந்த நினைப்புலஅலைஞ்சிகன்னா உங்க தலைமுறையில உங்கள எவனும் பொண்ணு கேட்டுவரமாட்டாம்ன்னு அதட்டுப் போட,
அந்தப் பொண்ணுகளும் நெஞ்சுக்குள்ளயே மச்சானை அரவணைச்சிக்கிட்டு,வீட்டுக்கும் காட்டுக்கும் அலைஞ்சிக்கிட்டு இருந்தாக. இப்படி இருக்கயில,
மூத்தவளுக்கும், கரடிகிட்டயிருந்து தப்பிப் பிழைச்சவனுக்கும் கலியாணம் முடிஞ்சது.இவம் அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்த நேரமோ என்னமோ மத்த மூனுகுமருகளுக்கும் மாப்பிளைக வந்துருச்சி. வந்த அந்த மாப்பிள்ளைக செண்டுஅடைஞ்சதும், வங்கு பத்துனதுமா அமைஞ்சிட்டது; என்ன செய்ய. இந்த மூனுகொமருகளுக்கும் மனசுக்குள்ள மச்சான், வெளியில புருசன்மாரு.
மூனு பேருக்கும் முந்தியே மச்சான்மேல ஒரு கண்ணு; இப்ப இந்த செண்டடைஞ்சதும்,வங்கு பத்துனதும் வத்துன மாப்பிள்ளைகளைப் பாக்கப்பாக்க மச்சான்மேல இன்னும்நினைப்பு கூடிக்கிட்டே போகுது.
இப்படி இருக்கயில ஒரு நா,
மூத்த மாப்பிள்ள, மாமன் மாமியாயிட்ட அயித்த நா என்னமோ ஒரு கோவத்துல எங்கஅய்யாட்ட சண்டெ போட்டுக்கிட்ட வீட்டெ விட்டு வந்திடெம். என்னக் காங்காமஆத்தாளும் அய்யாவும் எப்பிடிப் பரிதவிச்சிக்கிட்டிருக்காகளோ. ஒரு எட்டு நாம்போயி அவுகளப் பாத்துட்டு, எனக்கு இப்படி ஆயிட்டதயும் கலியாணம் முடிஞ்சசேதியவும் சொல்லிட்டு வந்திருதனேன்னும் கேட்டாம்.
என்னமோய்யா உன்ன நம்பி எங்க பொண்ண கொடுத்துட்டோம். நீங்க போயிஉங்களப் பெத்தவங்களே கதின்னு கெடி (ரயில் கெடி) சரக்கா கிடந்துராம ஊருவந்துசேருங்க. பொண்ணும் மசக்கையா இருக்கான்னு சொல்லி அனுப்பி வச்சாக.
அவன் ஊரு மந்தைய கழிக்கவும், மூத்தவளுக்கு நேர இளையவ வந்து மறிச்சா.மச்சாம், ஒம்மகூட தனிமயில பேச முடியல. நீரு எனக்கு கிடைப்பீருன்னு ஆசையாஇருந்தேம். எனக்குக் கொடுத்து வைக்கல. ஒருக்க மட்டும் எங்கூட சந்தோடம்உக்காந்து நாலு வார்த்த பேசி இருந்துட்டுப் போரும்ன்னு கையப் பிடிச்சா.
அவளோட பேச்ச தட்ட முடியல. ஒன்னும் மறுத்துப் பேச ஏலலெ. பக்கத்துல இருக்கஓடை மறைவுக்குப் போனாக.
நீருதாம் எனக்குக் கிடைக்கல. ஒம்மப் போல எனக்கு ஒரு பிள்ளையத் தாரும். அந்தப்பிள்ளைய நாங் கொஞ்சனும்ன்னா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications