For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்ட் கால-ரி

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

Clinton Playing Saxophoneஇசையால் வச-மா--க இதயம் எ-து? - இதை வேறு யாரும் சொல்லவில்லை. அமெரிக்க அதிபர் கிளிண்டன்தான் கூறியிருக்கிறார்.

கிளிண்டன் ஒரு இசைப் பிரியர் என்பது தெரியம். அவர் சேக்ஸபோன் நன்றாக வாசிப்பார் என்பது தெரியுமா?. "பிறவற்றைப் போலவே, சேக்ஸபோனிலும்கை தேர்ந்தவர் கிளிண்டன்.

"சேக்ஸபோனில் நான் முதலில் இசைத்தபோது, அது அவ்வளவு அழகாக இல்லை. ஆனாலும் கூட, சேக்ஸபோன் இசைப்பதால், மனது லேசாகிறதுஎன்கிறார் கிளிண்டன்.

சேக்ஸபோன் இசைப்பதால் மனசுக்கு இதமாக இருக்கிறது. வெள்ளை மாளிகையின் ஒரு ஓரத்தில் இடம் கிடைத்தால் கூட அங்கு சேக்ஸபோன்வாசிப்பேன் என்கிறார் புன்னகையுடன் கிளிண்டன்.

சமீபத்தில் நியூயார்க் நகரில் பிரபல இசைக் கலைஞர் பில்லி ஜோயலின் சேக்ஸ் கச்சேரி நடந்தது. அதில் அவருடன் சேர்ந்து, கிளிண்டனும் சேக்ஸ் வாசித்தார்.கச்சேரிக்குப் பிறகு ஸ்டேடியத்தில் கூடியிருந்த பள்ளிக் குழந்தைகள், இளம் கலைஞர்கள் மத்தியில் கிளிண்டன் பேசுகையில், அதிபர் பதவியின் நெருக்கடிக்குமத்தியிலும் நான் சேக்ஸ் வாசிக்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் சேக்ஸ் வாசிப்பதற்காக சிறு அறையை மனைவி ஹில்லாரி ஒதுக்கிக் கொடுத்தார். அதற்கு முன்பு வரை அந்த அறைசும்மா கிடந்தது. இப்போது அங்கு எனது ராஜ்யம்தான். யாரும் அந்த அறைப் பக்கம் வர மாட்டார்கள் என்றார் கிளிண்டன்.

தொடர்ந்து கிளிண்டன் பேசுகையில், எனக்கு 9 வயது இருக்கும்போதே, சேக்ஸ் வாசிக்கத் தொடங்கினேன். பள்ளியில் படிக்கும்போது நன்றாகப்பாடுவேன். பிறகு வயது ஆக, ஆக குரலின் மென்மை போய் விட்டது. இப்போது பாட நினைத்தாலும் பாட முடிவதில்லை. எனவே சேக்ஸுடன் எனதுஆசையை நிறுத்திக் கொண்டு விட்டேன் என்றார் ஏக்கத்துடன் கிளிண்டன்.

பரவாயில்லை, செக்-ஸில் மட்-டு-மல்ல "சேக்ஸிலும் கூட கிளிண்டன் அசத்துகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X