கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
கி. ராஜநாராயணன். இவர் ஒரு எழுத்துலக பாரதிராஜா. கிராமங்களை தன் எழுத்தின் மூலம் நம் கண் முன் கொண்டுவந்துவிடுபவர். கிராமத்துக் கதைகளை கிராமத்துத் தமிழிலேயே வழங்குவதில் இவருக்கு நிகர் இவர் யாருமில்லை.
இவர் நமக்கு வாரம் ஒரு "கத சொல்வாரு"....
இந்த வாரம்...
ஒரு ஊர்ல ஒரு குடியானவனும் அவனோட பொஞ்சாதியும் வாழ்ந்து வர்றாங்க. அவங்களுக்கு ரொம்பக் காலமா பிள்ளையே இல்லை. பிள்ளை வேணுமேன்னுஆசைப்பட்டாங்க.
எப்படியாவது ஒரு பிள்ளை வேணும்னு தீர்மானிச்சிட்டாங்க.புருசன் சொன்னாம்: அடியே நீ என்னா செய்வியோ ஏது செய்வியோ தெரியாது, எப்படி ஆனாலும்யார்ட்ட போயாவது எனக்கு பிள்ளையைப் பெத்துக் கொண்டா போ ன்னு சொல்லீட்டாம். பிள்ள வேணுங்கிற ஆசையில அவளும் சரீன்னுட்டா. இப்பயாரிட்ட போறது ன்னு யோசிக்கா. யார்ட்டெ போக முடியும். நம்ம இருப்புக்கு ராசாகிட்டவா போ முடியும். நமக்குத்த தொணை போறவங்ககிட்டதானெபோ முடியும்?
அந்தக் காட்டுல ஒரு வெறகு வெட்டியிருந்தாம். காட்டுக்கு இவ விறகு பொறுக்க போகும் போதெல்லாம் கவனிச்சிருக்கா. அந்தக் காட்டுலயேதனியா ஒரு குடிசை போட்டு அங்க குடியிருந்தாம். அவனப் பாத்துப் போனா.கொஞ்ச நாதாம் ஒங்கிட்ட இருப்பேம் ன்னு சொன்னா.இருக்கிற வரைக்கும் இரு:போகணும்னு தோணுனா பொ. அது ஒன்னிஸ்டம் ன்னுட்டாம்.
அவங்கிட்ட வாழ்க்கை நடத்துனதில அவளுக்கு ஒரு குழந்த பிறந்தது. ஆண் குழந்தை. அவளுக்கு சந்தோசம். அவனுக்கு ரொம்ப சந்தோசம். பிள்ள மேலரெண்டு பேரும் உயிரா இருக்காக. கொஞ்ச நா கழிஞ்சது.அவ கிளம்பணும்னு சொன்னா.குழந்தைக்குப் பால் மறக்கட்டும்: பிறகு பொ ன்னாம்.
எதுக்கு பால் மறக்காட்டனும். அவன் எங்கூடதனெ இருக்கப் போராம்ன்னா.நீ வரும் போது குழந்தையோடவா வந்தெ? தனியா வந்தெ. தனியாபொ. குழந்தைய நாந் தர முடியாது ன்னுட்டாம். "குழந்தைய நாம் பெத்தேம்ன்னா."நாங் கொடுத்தேம்: நா எடுத்துக்கிடுவேம் ன்னாம்.அவங் கால்லவிழுந்து அழுதா. விவரம் எல்லாத்தையும் சொன்னா. குழந்தை இல்லாம நா போ முடியாது ன்னா.
இவந் தர முடியாதுன்னுட்டாம்.
அவளுடைய புருசங்காரனும் வந்து சொல்லிப் பாத்தாம், ஒண்னும் நடக்கல. இந்த வழக்கு அந்த ஊரு ராசா கிட்டெப் போனது.
என்ன விவரம்: அவங்கவங்க ஞாயத்த சொல்லுங்கன்னு ராசா கேட்டாம்.
முதல்ல விறகு வெட்டி சொன்னாம்:
ராசாவே, நா ஒரு சுருக்குப்பை கண்டெடுத்தேம் .காலியா இருந்த அந்தப் பையில என்னோட காசைப் போட்டு வச்சேம். இப்பொ பையோடசொந்தக்காரன் வந்துகேக்கிறப்ப பையை வேனாத் தரலாம்:
போட்டுவச்ச காசையும் தர முடியுமா?
குடியானவனோட பொஞ்சாதி சொன்னா:
ராசாவே, என் வீட்டுப் பாலுக்கு உறை குத்த மோர் இல்ல.அடுத்த வீட்டுல இருந்து மோர் வாங்கி உறை குத்தி தயிர் ஆச்சி. இப்ப மோர் தந்தவம் வந்துதயிர் அவனுக்குத்தான் சொந்தம்ன்னா என்ன ஞாயம்?
குடியானவன் சொன்னாம்:
ராசாவே, தறு (கன்னிப் பசு) அடங்கறதுக்கு பசு மந்தையில கொண்டு விடுகிறது ஏற்பட்டவழக்கம். அங்கெ சினையாகி, கன்னு ஈனிய பிறகு பசுவையும்கன்னுக் குட்டியவும் சேத்துப் பத்திக்கிட்டு வர்றதுதாம் வழக்கம், பசுவ மட்டும் பத்திக்கிட்டுப்பொ, கன்னைத் தர முடியாதுன்னு
மந்தைக்குச் சொந்தக்காரன் சொல்லுவானா?
ராசாவுக்கு அந்த மூணு பேர் சொல்றதும் ஞாயம்தான்னு பட்டது. யாரு பக்கம் தீர்ப்பு சொல்றதுன்னு தெரியல. ரொம்ப நேரம் யோசிச்சி ராசா ஒரு தீர்ப்புசொன்னாம்:
அதுப்படி
இந்தப் பிள்ளை பெரியவன் ஆகிற வரைக்கும் நீங்க மூணு பேரும் ஒரு குடும்பமா இருக்கணும். பிள்ளை வளர்ந்து இளவட்டமானதும் அவம் யாரை எந்தப்பொண்ண விரும்புரானோ அவளைக் கலியாணம் முடிச்சி வச்சி இங்க கூட்டீட்டு வாங்க. அப்பொ நாந் தீர்ப்பு சொல்ரேம், பொயிட்டு வாங்கனுட்டாம்.
அதுபடியே பிள்ளை வளந்து பெரியவன் ஆனாம். அவம் பிரியப்பட்ட படியே ஒரு பொண்ணெக் கட்டி வச்சாங்க.
பிறகு எல்லாரும் அரமணைக்கு வந்து ராசாவ பாத்தாங்க.
ராசா இளவட்டத்தப் பாத்து, யப்பா, இப்ப நீ இந்த மூணு பேர்ல யாரு கூட இருக்கப் பிரியப்படுரென்னு கேட்டதும்,
நா எம் பொண்டாடி கூட இருக்கப் பிரியப்படுதேம் ன்னு சொன்னானாம்.
அந்த மூணு பேரும் பாவம்: விக்கி விரைச்சிப் போனாங்களாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications