பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 03, 2001
இரண்டாங் கிளை: புகழ்
ஞாயிறு
2.
மின்னல், இரத்தினம், கனல், தீக் கொழுந்து-
இவை யெல்லாம் நினது நிகழ்ச்சி.
கண் நினது வீடு.
புகழ், வீரம் - இவை நினது லீலை.
அறிவு நின் குறி, அறிவின் குறி நீ.
நீ சுடுகின்றாய் வாழ்க. நீ காட்டுகின்றாய், வாழ்க.
உயிர் தருகின்றாய், உடல் தருகின்றாய்,
வளர்கின்றாய், மாய்க்கின்றாய்,
நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
