Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு:
யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்,
ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருத்துலகம் இங்குள்ள
யாவையும் செய்பவளே! (1)


பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிரப்
பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்
செத்த உடலாக்கு;
இந்தப் பதர்களையே - நெல்லா மென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே. (2)


உள்ளம் குளிராதோ? - பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ - அம்மா! பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
வின்னற் கரியவளே - அனைத்திலும்
மேவி யிருப்பவளே! (3)

(தொடரும்)
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+