பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 07, 2001
இரண்டாங் கிளை: புகழ்
ஞாயிறு
6.
ஞாயிறின் மகளா?
அன்று, நீ ஞாயிற்றின் உயிர், அதன் தெய்வம்.
ஞாயிற்றினடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம்.
ஞாயிற்றின் வடிவம் உடல், நீ உயிர்.
ஒளியே, நீ எப்போது தோன்றினாய்?
நின்னையாவர் படைத்தனர்?
ஒளியே நீ யார்?
உனதியல்பு யாது?
நீ அறிவின் மகள் போலும் அறிவுதான் தூங்கிக் கிடக்கும்.
தெளிவு நீ போலும்
ஒளியே, நினக்கு வானவெளி எத்தனை நாட் பழக்கம்?
உனக்கு அதனிடத்தே இவ்வகைப்பட்ட அன்பு யாது
பற்றியது?
அதனுடன் நீ எப்படி இரண்டரக் கலக்கிறாய்?
உங்களை யெல்லாம் படைத்தவள் விந்தைக்காரி.
அவள் மோஹினி, மாயக்காரி
அவளைத் தொழுகின்றோம்.
ஒளியே. வாழ்க!
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
