பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 07, 2001
7.
எத்தனை .சிறியது.!
அதற்குள்ளே கை, வால், வாய், வயிறு எல்லா அவயங்களும்
கணக்காக வைத்திருக்கிறது.
யார் வைத்தனர். மஹா சக்தி.
அதற்கு உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன.
எறும்பு உண்ணுகின்றது. உறங்குகின்றது.
மணம் செய்து கொள்கின்றது.
குழந்தை பெறுகிறது.
ஓடுகிறது. தேடுகிறது.
போர் செய்கிறது. நாடு காக்கிறது.
இதற்கெல்லாம் காற்றுதான் ஆதாரம்.
மஹாசக்தி காற்றைக் கொண்டுதான்
உயிர் விளையாட்டு விளையாடுகின்றாள்.
காற்றைப் பாடுகிறோம்.
அஃது அறிவே துணிவாக நிற்பது:
உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்களாவது.
உயிரிலே உ.யிர் தானாக நிற்பது.
வெளி யுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம்,
நாம் அறிவதில்லை.
காற்றுத் தேவன் வாழ்க.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
