பாரதி பக்கம்
செப்டம்பர் 07, 2001
கண்ணம்மாவின் எழில்
தாளம் - ரூபகம்
பல்லவி
எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப் பூ:
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப் பூ
எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப் பூ,
எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன்.
சரணங்கள்
1.
எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்:
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்,
திங்களை மூடிய பாம்பினைப் போலே
செறி குழல், இவள் நாசி எட்பூ. (எங்கள்)
2.
மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று:
மதுர வாய் அமிர்தம்: இத ழமிர்தம்:
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை,
சாய லரம்பை: சதுர் அயிராணி (எங்கள்)
3.
இங்கித தாத நிலைய மிருசெவி
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்:
மங்களக் கைகள் மஹா சக்தி வாசம்!
வயிறாவலை: இடை அமிர்த வீடு (எங்கள்)
4.
சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்:
தாமரை யிருநாள் லட்சுமி பீடம்:
பொங்கித் ததும்பித் திசை யெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம். (எங்கள்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards