பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ராகம் - ஆபோகி

தாளம் - ரூபகம்

1.பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும்
பித்துடையாள் எங்கள் அன்னை
காயழல் ஏந்திய பித்தன் - தனைக்
காதலிப்பாள் எங்கள் அன்னை (பேயவள்)


2.இன்னிசை யாம்இன்பக் கடலில் - எழுந்து
ஏற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடம் மூழ்கித் திளைப்பாள் - அங்குத்
தாவிக் குதிப்பாள்எம் அன்னை. (பேயவள்)


3.தீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில்
தெய்வீக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி - மதுத்
தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)


4.வேதங்கள் பாடுவன் காணீர் - உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி - உணர்த்
தோதி யுலகெங்கும் விதைப்பாள் (பேயவள்)
5.பாரதப் போரெனில் எளிதோ. - விறற்
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வான்
மாரதர் கோடிலந் நாலும் - கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள். (பேயவள்)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+