For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
மே 12, 2001
இரண்டாங் கிளை: புகழ்
ஞாயிறு
11.
சக்திகளே, எல்லோரும் வருவீர்
ஞாயிற்றைத் துதிப்போம், வாருங்கள்.
அவன் நமக்கெல்லாம் துணை.
அவன் மழை தருகின்றான்.
மழை நன்று.
மழைத் தெய்வத்தை வாழ்த்துகின்றோம்.
ஞாயிறு வித்தை காட்டுகிறான்.
கடல்நீரைக் காற்றாக்கி மேலே கொண்டு போகிறான்.
அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான்.
மழை இனிமையுறப் பெய்கின்றது.
மழை பாடுகின்றது.
அது பலகோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி.
வானத்திலிருந்து அமுதவயிரக்கோல்கள் விழுகின்றன.
பூமிப்பெண் விடாய் தீர்கிறாள்: குளிர்ச்சி பெறுகின்றாள்.
வெப்பத்தால் தண்மையும், தண்மையால் வெப்பமும்
விளைகின்றன.
அனைத்தும் ஒன்றாதலால்,
வெப்பம் தவம், தண்மை யோகம்.
வெப்பம் ஆண், தண்மை பெண்.
வெப்பம் வலியது, தண்மை இனிது.
ஆணிலும் பெண் சிறந்ததன்றோ?
நாம் வெம்மைத் தெய்வத்தைப் புகழ்கின்றோம்.
அது வாழ்க.
(தொடரும்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]