For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஆகஸ்டு 14, 2001

Subramaniya Bharathi

கண்ணன் என் காதலன் - 1

ராகம்: செஞ்சுருட்டி

தாளம்: ஏக தாளம்

சிருங்கார ரசம்
தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்:
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
வெறுத்து விட்ட தடீ! (1)

பாயின் மிசை நானும் - தனியே
படுத் திருக்கையிலே,
தாயினைக் கண்டாலும்- சகியே!
சலிப்பு வந்தததடீ!
வாயினில் வந்ததெல்லாம் - சகியே
வளர்த்துப் பேசிடுவீர்;:
நோயினைப் போலஞ் சினேன்ே - சகியே!
நுங்க ளுறவை யெல்லாம். (2)

உணவு செல்லவில்லை - சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மனம் விரும்பவில்லை - சகியே!
மலர் பிடிக்கவில்லை.
குண முறுதியில்லை - எதிலும்
குழப்பம் வந்ததடீ!
கணமும் உள்ளத்தில் - சுகமே
காணக் கிடைத்ததில்லை. (3)

பாலுங் கசந்த தடீ! - சகியே!
படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளி மொழியும் - செவியில்
குத்த தெலுத்ததடீ!
நாலு வயித்தியரும் -இனிமேல்
நம்புவதற் கில்லை யென்றார்:
பாலத்து சோசியனும் - கிரகம்
படுத்து மென்று விட்டான். (4)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X