பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
செப்டம்பர் 13, 2001
சாகாவரம்
பல்லவி
சாகாவர மருள்வாய், ராமா!
சதுர்மறை நாதா! சரோஜ பாதா!
சரணங்கள்
1. ஆகாசந் தீகால் நீர்மண்
அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்,
ஏகார்மித மாகிய நின்தாள்
இணைசகர ணென்றால் இது முடி யாதா! (சாகா)
2. வாகார்தோள் வீரா, தீரா,
மன்மத ரூபா, வானவர் பூபா,
பாகார்மொழி சீதையின் மென்றோள்
பழகிய மார்பா! பாதமலர் சார்பா!(சாகா)
3. நித்யா, நிர்மலா, ராமா,
நிஷ்களங்கா, சர்வா, தாரா,
சத்யா, சநாதநா, ராமா,
சரணம், சரணம், சரண முதாரா! (சாகா)
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
