பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜுலை 14, 2001
சுதந்திர தாகம்
தாளம்: ஆதி
1. என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம் தன்னைகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே!
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
வெற்றி தருந்துணை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ?
2. பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்சலென் றருள் செயுங் கடைமையில் லாயோ?
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே!
வீர சிகாமணி! ஆரியர் கோனே!
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
