பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 15, 2001
2. சக்தி
1
சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்.
சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது
அசையாமையில் அசைவு காட்டுவது.
சக்தி அடிப்பது, துரத்துவது, கூட்டுவது,
பிணைப்பது, கலப்பது, உதறுவது,
புடைப்பது, வீசுவது, சுழற்றுவது,
கூட்டுவது, சிதறடிப்பது, தூற்றுவது,
ஊதிவிடுவது, நிறுத்துவது, ஓட்டுவது,
ஒன்றாக்குவது, பல வாக்குவது.
சக்தி குளிர் செய்வது, அனல் தருவது,
குறுகுறுப்பு தருவது,
குதூஹலந்தருவது, நோவு தீர்ப்பது,
இயல்பு தருவது, இயல்பு மாற்றுவது,
சோர்வு தருவது, ஊக்கந் தருவது,
எழுச்சி தருவது, கிளர்ச்சி தருவது,
மலர்விப்பது, புளகஞ் செய்வது,
கொல்வது, உயிர் தருவது.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
