பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஆகஸ்டு 17, 2001
தமிழ்மொழி வாழ்த்து
தான தனத்தன தாந தனத்தன தான தந்தன
1.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
2.
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
3.
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
4.
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
5.
சூழ்கவி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலகுக வையக மே!
6.
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!
7.
வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ் மொழி யே!
8.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
