For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ராகம்: கமாஸ்
ராகம்- பிலஹரி
1. பறையருக்கும் இங்கு தீய
புலையருக்கும் விடுதலை!
பரவ ரோடு குறவ ருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்ட தீமை யற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே (விடுதலை)
2. ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே:
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து ஒருநிகர்
சமானமான வாழ்வமே! (விடுதலை)
3. மாதர் தம் இழிவு செய்யும்
மடமைை யேக்கொ ளுத்துவோம்:
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மானமாக
வாழ்வம் இந்த நாட்டிலே (விடுதலை)
(தொடரும்)
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]