பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

நவம்பர் 19, 2001

Subramaniya Bharathi

கண்ணம்மாவின் எழில்

ராகம்- செஞ்சுருட்டி
தாளம் - ரூபகம்

பல்லவி

எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப் பூ:
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப் பூ
எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப் பூ,
எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன்.

சரணங்கள்

1. எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்:
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்,
திங்களை மூடிய பாம்பினைப் போலே
செறி குழல், இவள் நாசி எட்பூ. (எங்கள்)


2. மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று:
மதுர வாய் அமிர்தம்: இத ழமிர்தம்:
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை,
சாய லரம்பை: சதுர் அயிராணி (எங்கள்)


3. இங்கித தாத நிலைய மிருசெவி
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்:
மங்களக் கைகள் மஹா சக்தி வாசம்!
வயிறாவலை: இடை அமிர்த வீடு (எங்கள்)


4. சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்:
தாமரை யிருநாள் லட்சுமி பீடம்:
பொங்கித் ததும்பித் திசை யெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம். (எங்கள்)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+