பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 20, 2001
விடுதலைக் காதல்
கடுகிவளந்திடு மென்பார் யூரோப் பாவில்:
மாதரெல்லாம் தம்முடைய விரும்பிய வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்:
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே.
பிரியம்வந்தால் கலந்தபின்பு பிரிந்துவிட்டால்,
வேதனையொன்றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் தனைக்கூட வேண்டும் என்பார். (54)
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்
விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்!
சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார்.
காரணத்தான் யாதெனிலோ, ஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார்: கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே! (55)
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால் ,
நலமான கூரையுந்தான் எரிந்தி டாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார்?
காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்
கற்புகற் பென்றுலுகோர் கதைக்கின் றாரே! (56)
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
