பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மூன்றாவது காதல் - காளி காதல்
ராகம்: புன்னாக வராளி
தாளம்: திஸ்ர ஏகம்
தாளம்: திஸ்ர ஏகம்
பின்னொர் இராவினிலே - கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு,
கன்னி வடிவமென்றே - களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! - இவள்
ஆதி பராசக்தி தேவி யடா! - இவள்
இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! (8)
செல்வங்கள் பொங்கிவரும் - நல்ல
தென்னறி வெய்தி நலம்பல சார்ந்திடும்:
அல்லும் பகலுமிங்கே - இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை - இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை - நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா! (9)
(தொடரும்)












Click it and Unblock the Notifications