பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

அக்டோபர் 26, 2001

Subramaniya Bharathi

ஜயம் உண்டு

பல்லவி

ஜயமுண்டு பயமில்லை மனமே! - இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு (ஜய)

அனுபல்லவி

பயணுண்டு பக்தியினாலே - நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை (ஜய)

சரணங்கள்

1. புயமுண்டு குன்றத்தைப் போலே- சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை.
நெறியுண்டு:குறியுண்டு: குலசக்தி வெறியுண்டு (ஜய)


2. மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ
வலியுண்டு தீமையைப் போக்கும்:
விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு:குறைவில்லை
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு . (ஜய)


3. அலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி
அருளென்னுந் தோணியினாலே,
தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடு பட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+