பாரதி பக்கம்
பிப்ரவரி 28, 2001
தேசிய கீதங்கள்
சுதந்திரப் பயிர்
கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ? (1)
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள் வளர்த்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ? (2)
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? (3)
தர்மமே வெல்லுமெனும் சான்றோர்சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ? (4)
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? (5)
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
எண்ணற்ற செய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? (6)
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? (7)
எந்தாய்! நீதந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயின்றி நோவழிப்பார் யாருளரோ? (8)
இன்பச் சுதந்தரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப் பறித்தாற் காவாயோ?(9)
வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ? எந்தை சுயா
தீனமெமக் கில்லையென்றால் தீனரெது செய்வோமே? (10)
நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்:
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ? (11)
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே? (12)
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம்கேட்டால்,
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ? (13)
இன்று புதிதாய் இரக்கின்றோமோ? - முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ? (14)
நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்,
ஓயுமுன்னர் எங்களுக்கில் ஓர்வரம் நல்குதியே. (15)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications