பிரஞ்சுக்குச் சென்ற தமிழ் சிறுகதைகள்
லண்டன்:
20 தமிழ் சிறுகதைகள் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டு தமிழுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழின் பெருமையை தமிழர்களாகிய நாம் உணர்கிறோமோ இல்லையோ அதை மற்ற மொழியினர் போற்றியே வந்துள்ளனர். கர்நாடகம் தவிர்த்து தமிழ்எங்கும் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டதில்லை.
இப்போது தமிழின் அட்டகாசமான 20 படைப்புகள் பிரஞ்சு மொழியில் வெளியாகியுள்ளன. தமிழ் மற்றும் பிரஞ்சு மொழிகளுக்கு இடையிலான இலக்கியபிணைப்பில் இது ஒரு மைல் கல் என்று தான் சொல்ல வேண்டும்.
தென் இந்திய குறித்தும், தென் இந்திய மொழிகள் குறித்தும் ஆய்வு நடத்தி வரும் பிரஞ்சு நிபுணரான டாக்டர் பிராங்காய்ஸ் குரோஸ் தமிழிடம் தன்னைஇழந்ததன் விளைவு தான் இந்தப் பெருமை மிகு மொழிபெயர்ப்புகள்.
தமிழின் படைப்புகள் குறித்து ஆராய பாண்டிச்சேரியில் உள்ள பிரஞ்சு மையத்துக்குச் சென்றவர் செம்மொழியின் தாக்கத்துக்கு உள்ளானார். அந்த மையத்தின்ஆய்வாளர் கண்ணனை துணைக்கு வைத்துக் கொண்டு கடந்த 60 ஆண்டுகளில் வெளியான தமிழ் சிறுகதைகளை ஆராய்ந்தார்.
1935ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை வெளியான நூல்களை ஆராயந்து அதில் 20 நூல்களை மொழி பெயர்ப்புக்காகத் தேர்வு செய்தார்.
நாகலிங்க மரம் என்ற பெயரில் ஒரு தொகுப்பாக இந்த 20 சிறுகதைகளும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் பாதிக்கும்மேற்பட்டவை ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டன.
பாரிஸில் உள்ள சோர்போன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் டாக்டர் பிராங்கோய்ஸ் குரோஸ் இந்திய நிருபர்களிடம்கூறுகையில், தமிழ் படைப்புகள் சர்வதேச தரத்தில் உள்ளதை யாரும் மறுத்துவிட முடியாது. தமிழ் மொழியின் சம காலத்திய(Contemporary prose)படைப்புகளை என் நாட்டு மக்கள் படிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். இதனால்தான் இந்த மொழி பெயர்ப்பில் ஈடுபட்டோம்.
உலக வளர்ச்சிக்கு ஈடு கொடுத்து தமிழ் மொழியும் வளர்ந்திருக்கிறது. சமூகத்தைப் பிரதிபலிப்பதிலும், மக்களின் குரலைவெளிப்படுத்துவதிலும் தமிழ் படைப்புகளுக்கு ஈடு இணை இல்லை என்றார்.
தமிழ் சிறுகதை உலகின் நிறுவனர் என்று அழைக்கப்படும் புதுமைப் பித்தனில் ஆரம்பித்து, கள்ளர் சமூகம் குறித்துவேலராமமூர்த்தி எழுதியுள்ள சமீபத்திய சிறுகதை வரை 20 நூல்கள் பிரஞ்சு இலக்கியத்தில் இடம் பிடித்துள்ளன.
சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி, கே.என். சுப்பிரமணியம், தி.ஜானகிராமன் ஆகியோரின் சிறுகதைகளும் இதில் அடங்கும்.












Click it and Unblock the Notifications