சாலமன் பாப்பையாவுடன் ஒரு சந்திப்பு
கல்லூரிப் பேராசியர், தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர் என்று பன்முகம் கொண்டவர் சாலமன் பாப்பையா. இவர் நடுவராகப் பங்கேற்கிற பட்டிமன்றங்கள்வந்த பிறகுதான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் பட்டிமன்றங்கள் செல்லத் தொடங்கின. வள்ளுவன் தந்த குறளுக்கு நகைச்சுவை கலந்து இவர் தரும்விளக்கவுரை தமிழர்களை சிரிக்க, சிந்திக்க வைத்தது மட்டுமல்லாமல் குறளின் பெருமையை உணரவும் வைத்திருக்கிறது. இந்த கருத்த மனிதரை அந்திவானம் சிவக்கிற வேளையில் சந்தித்த போது...
"வாழ்க்கை" திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின்..... ஒரு ஒப்பீடு
நான் பிறந்தது ஒரு பெரிய குடும்பத்தில். அதாவது நாங்கள் சகோதரர்கள் மொத்தம் 10 பேர். மிகக் குறைந்த வருமானம் உள்ள குடும்பம். தந்தையாரின்வருமானம் மட்டுமே. தாயார் ஒரு நோயாளி. ஆகவே, நான் படிக்கும் போதே டியூசன் எடுக்கத் தொடங்கி விட்டேன். எனக்கு நண்பர்கள் அதிகம். மிகச்சிறந்த நண்பர்களை நான் கொண்டிருந்ததால் வாழ்க்கை அந்த வயதில் எனக்குக் கடினமாகத் தெரிய வில்லை.
படிப்பு முடிந்த பிறகு சிறு சிறு இலக்கியக் கூட்டங்களில் பேசத் தொடங்கினேன். அப்போது அமெரிக்கன் கல்லூரியில் பேராசியராக பணிபுரிந்து கொண்டிருந்ததால்நல்ல இடத்தில் பெண் பார்த்தார்கள். அப்படிக் கிடைத்தவர்தான் என் மனைவி ஜெயபாய். அப்போது ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்தார். ஆனால்திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்லவில்லை. வீட்டுப் பொறுப்புகளை முழுக்க முழுக்க அவரே கவனித்துக் கொண்டார். இதனால் திருமணத்திற்குப்பிறகும் என்னுடைய இலக்கியப் பணிகளை தொய்வின்றி தொடர முடிந்தது.
உங்கள் மனைவியைப் பற்றியும், உங்கள் வளர்ச்சியில் அவருடைய பங்கு பற்றியும்..?
எனக்கு மிகவும் பிரியமானவர் என் மனைவி. குடும்பப்பாங்கானவர். வாழ்க்கையில் மிகவும் ஒத்தாசையாக இருப்பவர். குழந்தை வளர்ப்பு, குடும்பத்தைநடத்திச் செல்லுதல் போன்ற பணிகளை செவ்வனே செய்து வருபவர். என்னுடைய சுயநலம் காரணமாக அவர் செய்து வந்த ஆசிரியப் பணியைத் தொடர முடியாமல்போனபோது கொஞ்சமும் முகம் கோணாதவர். என்னுடைய தேவையறிந்து செயல்படக் கூடிய அவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.
அதன்படி என்னுடைய முழு சம்பளத்தையும் அப்படியே மனைவியிடம் கொடுத்து விடுவேன். என்னுடைய செலவுகளுக்கும், தேவைகளுக்கும் அவரிடமிருந்துதேவைப்படும் போது பணம் பெற்றுக் கொள்வேன். மற்றபடி பேச்சு மேடைகள், நிகழ்ச்சிகளில் கிடைக்கும் வருவாய் பற்றி குறிப்புகளை எழுதிவைத்துக் கொள்வேன். அதில் என்னுடைய செலவுகள் போக மீதமுள்ள பணத்திற்கு புத்தகங்கள் வாங்குவேன். அதைப் பற்றி எதுவும் கேட்கக் கூடாதுஎன்பது எனக்கும் என் மனைவிக்குமிடையேயான ஒப்பந்தத்தின் முக்கிய கூறு. இதில் என் மனைவிக்கு சற்று வருத்தம்தான். இருப்பினும் என்னுடையவளர்ச்சிக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் தன்மை கொண்டவராகவே இன்றும் இருக்கிறார்.
பட்டிமன்றங்கள் நடத்தப்படுவதன் நோக்கம் என்ன? பொழுது போக்கு, நகைச்சுவை மட்டும்தானா?
பட்டிமன்றம் என்பதை வேறு ஒரு கோணத்தில் அணுக வேண்டும். சமயங்களில் மிகப் பெரியது இந்து சமயம். அடுத்து இஸ்லாம், அடுத்து கிறிஸ்தவம். மூன்றுசமயங்களிலும் கல்வியில்லாத மக்கள் அதிகம். இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் சமயத்தை இணைத்து நடத்தும் இலக்கிய விழாக்கள் மிகவும் குறைவு.இந்து சமயத்தில் சமய இலக்கியம்தான் அதிகம். கோயில்களில் நடைபெறும் உபன்யாசங்களை கல்வியறிவு மிக்க மேட்டுக்குடி மக்கள்தான் அதிகம்கேட்கச் சென்றனர். 1932க்குப் பிறகு அனைத்துப் பிரிவு மக்களும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும் கூட கல்வியறிவில்லாதவர்களுக்கு பெரிய கோவில்களில் நடக்கும் உபன்யாசங்களைப் பெற்று உள் வாங்கும் அளவிற்கு சக்தியில்லை.
தொடர்ந்து அரசிய-ல் வந்த பகுத்தறிவு இயக்கங்கள், புராண இதிகாசங்களைப் பற்றி கேலி-யாகவும் கிண்டலாகவும் பேசத் தொடங்கின.எதிர்மறையான கருத்துக்களையும் கேட்பதற்காக கூட்டம் கூடத் தொடங்கியது. அப்போது, வெறும் ஆட்டம் பாட்டம் மட்டும் போதாது.இக்கூட்டத்தின் மூலம் மக்களுக்குப் பயனுள்ள விசயங்கள் போய்ச் சேர வேண்டும் என்ற கட்டாயத்தில்தான் பட்டிமன்றங்கள் தொடங்கின. 1960ல்இருந்து 43 ஆண்டுகளில் பட்டிமன்றங்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்து மலர்ந்திருக்கின்றன.
பொழுதுபோக்கு என்பது எல்லாவற்றிலும் உண்டு. ஆனால் போக்குவதற்கல்ல பொழுது, ஆக்குவதற்கு என்பது குன்றக்குடி அடிகளாரின்பட்டிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டது.
ஒரு சிலர் பட்டிமன்றங்களை நகைச்சுவை துணுக்குத் தோரணமாக செய்து விடுகிறார்கள். மக்கள் விரும்புவதால் தான் அப்படிச் செய்கிறார்கள்.பட்டிமன்றம் என்பது நகைச்சுவை மட்டுமல்ல... நகைச்சுவையும் கலந்தது.
பட்டிமன்றங்களின் தலைப்பை எப்படி முடிவு செய்கிறீர்கள்?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விவாத மேடைகள்தான் இருந்தன என்பது பட்டினப்பாலை நூலி-ன் மூலம் நாம் அறிய முடிகிறது. தடித்தவார்த்தைகள்தான் விவாத மேடைகளில் வந்து விழுந்திருக்கின்றன. மணிமேகலையில் பட்டி மண்டபம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.பின்னர், வேறு வேறு கலைகளைப் பற்றி ஆய்வு செய்கிற களமாக பட்டிமன்றம் மாறியது
1940களில் அறிஞர் சா.கணேசன் பட்டிமன்றத்தை இலக்கியத்தில் அறிமுகப்படுத்தினார். 1960களில் சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் பட்டிமன்றங்களின்போக்கை மாற்றினார் குன்றக்குடி அடிகளார். 1970க்குப் பிறகு எங்களைப் போன்றவர்கள் பட்டி மன்றங்களை குடும்பத்திற்குள் கொண்டுசென்றிருக்கிறோம். சமயத் தலைப்பு, இலக்கியத் தலைப்பு, சமுதாயத் தலைப்பு, குடும்பத் தலைப்பு, அறிவியல் தலைப்பு என்று அந்தந்தப் பகுதி மக்களின்விருப்பத்திற்கு ஏற்ப தலைப்புகள் நிர்ணயிக்கப்படுகிறது.
இன்றைய பட்டிமன்றங்களின் போக்கு எப்படி உள்ளது? எந்த வகையில் சமுதாயத்திற்குப் பயன்படுகிறது?
ஒவ்வொருவரும் அவரவர்களுக்குத் தெரிந்த பாணியில் பட்டிமன்றங்களை நடத்துகின்றனர். பயனில்லாதது விலை போகாது. பட்டிமன்றங்கள் அதன்போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. சமுதாயப் பயன் என்பது எடுத்துக் கொள்கிறவர்களைப் பொருத்தது.
குடும்ப வாழ்க்கை தொடர்பான பட்டிமன்றங்களில் எதை மையமாக வைத்து தீர்ப்பு வழங்குவீர்கள்?
குடும்பம் என்பது பாசத்தால் கட்டப்பட்ட கயிறு. அந்தக் கயிற்றில் புதிதாக மனைவி என்ற ஒருத்தியை கோர்த்த பிறகு அவளையும் பாகுபாடில்லாமல்நேசிப்பது என்பதுதான் நம் குடும்ப அமைப்பிற்கு சேர்க்கப்படுகிற வலு. குடும்பத்தை வலுவுள்ளதாக ஆக்கினால் சொர்க்கம் அங்கு உருவாகிவிட்டதாக அர்த்தம். எனவே, குடும்ப வாழ்க்கை தொடர்பான பட்டிமன்றங்களில் உண்மையை மையமாக வைத்தும், பெண்மையை மையமாக வைத்தும்தீர்ப்புகள் வழங்குவேன்.
இன்றைய நவீன உலகில் பட்டிமன்றங்களை பார்ப்பது, கேட்பது, சிரிப்பது தவிர சிந்திக்கவும் செய்கிறார்களா? இது தொடர்பாக தங்கள் அனுபவம்ஒன்று..?
பார்ப்பவர்கள், கேட்பவர்கள், ரசிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். மக்கள் ஆர்வத்தைப் பார்க்கும்போது சிரிப்பதற்காக பார்க்கிறார்களா?சிந்திக்கவும் செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. ஆனால் நிறைய கடிதங்கள் எனக்கு வருவதுண்டு. ஒரு முறை வெளியூரில் நிகழ்ச்சியை முடித்து மேடையைவிட்டு கீழே இறங்கி வந்த போது ஒரு இளைஞர் என் கையைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கி விட்டார். அவரை சமாதானப்படுத்தி என்ன? ஏது?என்று விசாரித்த போது... அன்றைய பட்டிமன்றத்தில் எனது பேச்சைக் கேட்டு வாழ்க்கையில் மனம் திருந்தியதாக கூறினார். அவரை வாழ்த்தி விட்டுவிடை பெற்றேன்.
- மன்னை பாஸ்கர்([email protected])
இவரது முந்தைய படைப்புகள்:
1. அஞ்சு நிமிஷம்
2. குழப்பம்
3. இன்டர்வியூ
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications