மனிதனுக்கு மதம் அவசியமா?
சிறந்த பேச்சாளர், நல்ல சிந்தனையாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று சமூகத் தாக்கம் நிறைந்த துறைகளில் வித்தகராய் திகழும் சுகி.சிவம்அவர்களை சந்தித்தபோது... :
அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் நடைமுறை கருத்துக்களை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லும் ஆர்வம் உங்களுக்குள் எப்படித்தோன்றியது என்பது பற்றி..?
அது என்னுடைய இயல்பு, அதற்கான காரணம் என்று எதுவும் சொல்ல முடியாது. நான் புரிந்து கொள்ளாததை எப்பொழுதுமே பிறருக்கு சொல்ல விரும்புவதுகிடையாது. வாழ்க்கையின் மேல் கவனம் செலுத்தி நிகழும் சம்பவங்களை தனக்குள் வேடிக்கை பார்த்து, அது ஏன் நடந்தது? எப்படி, எதற்காக நடந்ததுஎன்று சிந்திப்பவர்கள் மிகவும் குறைவு. எனக்குள் அந்த இயல்பு அதிகம். அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாமே சாட்சியாக இருந்துகவனிக்கப் பழகினால் நிறைய சாதிக்கலாம்.
மன அமைதிக்கு எல்லை உண்டா? எதன் மூலம் அது சாத்தியமாகும்?
எல்லை என்ற ஒன்று இருந்தாலே அதை உடைக்கத்தான் தோன்றும். எனவே மன அமைதி என்பது எல்லையற்றதுதான். நாம் எல்லைகளற்ற ஆத்மாஎன்ற ஞானம் கைகூடினால்தான் மன அமைதி சாத்தியமாகும். மற்றபடி மன அமைதிக்காக மேற்கொள்ளப்படும் சின்னச் சின்ன பயிற்சிகள், முயற்சிகள்அனைத்தும் தற்கா-லிகமானவை தான்.
மனிதனுக்கு மதம் அவசியமா?
இன்றைய உலகில் மதம் என்பது கெட்ட வார்த்தையாகிவிட்டது. வாழும் வழிமுறைகளை அடுத்த தலைமுறைக்கு சொல்ல நம் முந்தைய தலைமுறைபின்பற்றிய டெக்னிக்தான் மதம். ஆனால், அதையே குருட்டுத் தனமாக பின்பற்றுபவதுதான் சிக்கலுக்குக் காரணம்.
தன் மதமே உயர்வானது, பிற மதங்கள் மட்டமானவை என்று அசட்டு அகங்காரங்களை மதபோதகர்கள், மதத்தலைவர்கள் உண்டு பண்ணுகிறார்கள்.அது பிழையானது. மதம் என்பது கண்ணியமான வாழ்க்கை நடைமுறைகளை போதிக்கக் கூடியது. அது அவசியமா? இல்லையா? என்பது அவரவர்கள்முடிவைப் பொறுத்தது.
கடவுள் நம்பிக்கை என்பது...?
கடவுள் நம்பிக்கை என்பது பிழையானது. கடவுள் உணரத்தக்கவரே தவிர, நம்பத்தக்கவரல்ல. குருட்டுத்தனமான நம்பிக்கை என்றுமேதோல்வியில்தான் முடியும். வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் அனுபவங்களை உணர்வதே சரியானது. அதற்கு கடவுள் என்று பெயர் வைத்து பின்னால்நம்பிக்கை தோற்று விட்டது என்பது தவறு. நம்புகிறவர்கள் கடவுளை புரிந்து கொள்ள மாட்டார்கள்.
ஆத்திகம், நாத்திகம் இரண்டுக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வேறுபாடு...?
ஆத்திகம், நாத்திகம் இரண்டும் ஒன்றுதான். ஆத்திகர்களுக்கும், நாத்திகர்களுக் கும் இடையே பெரிய சண்டை நடக்கிறது. ஆத்திகத்திற்கும், நாத்திகத்திற்கும்பெரிய இடை வெளி. ஆத்திகர்கள் பிரம்மம் என்று சொல்கிறார்கள். நாத்திகர்கள் சூன்யம் என்று சொல்கிறார்கள். ஆதி சங்கரரே கூட பாதி நாத்திகர்தான்என்றார்கள். ஆத்திகத்தைப் பிழைப்பாக நடத்துகிறவர்களும், நாத்திகத்தை முழு நேரத் தொழிலாக நடத்துபவர்களும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.சண்டை போட்டால்தான் இருவருமே பணம் சம்பாதிக்க முடியும். மற்றபடி இரண்டும் ஒன்றுதான்.
இல்லறம் நல்லறமாக நீங்கள் சொல்ல விரும்புவது...?
கணவன்-மனைவி இருவரும் நண்பர்களைப் போல புரிதல்களோடு பழக வேண்டும். குடும்பம் என்பது ஒரு நிறுவனம். பிழையாக பெண்ணியம் பேசுகிற பலர்குடும்பம் என்கிற நிறுவனத்தை உடைக்கப் பார்க்கிறார்கள். பிழை இருந்தால் திருத்தப் பார்க்க வேண்டுமே தவிர உடைக்கப் பார்க்கக் கூடாது.
மனித வாழ்வில் எது உயர்ந்த லட்சியமாக இருக்க முடியும்?
நம்முடைய வாழ்க்கையை நாமே திரும்பிப் பார்த்தால்... அது விரும்பத்தக்க வியக்கத்தக்க வாழ்க்கையாக இருந்தால் அந்த வாழ்க்கையை வாழ்வதேஉயர்ந்த லட்சியம். தானே தன்னை மதிக்கும் மனிதனாக வாழ்வதே உயர்ந்த லட்சிய வாழ்க்கை. "
ஆணின் வெற்றிக்கு அடித்தளமிடுபவர் தாயா? தாரமா?
வாழ்க்கை என்பது வளருகிற ஒரு கட்டடம். ஒவ்வொரு தளமும் அடுத்ததற்கு அடித்தளமாகி விடும். எனவே, ஆரம்பத்தில் தாய் அடித்தளமாகிறாள். பிறகுதாரம் அடித்தளமாகிறாள். இரண்டு பேரும் பகையில்லாமல் இருந்தால் அதுவே மிகப் பெரிய வெற்றிக்கு அடித்தளமாகி விடுகிறது.
சமூகத்தை சீரழிப்பதில் பெரும்பங்கு வகிப்பது சினிமாவா? தொலைக்காட்சியா?
சினிமாவை விட சின்னத்திரைதான் நல்லது செய்வது. கெட்டது செய்வது இரண்டிலுமே முன்னிலை வகிக்கிறது. தொலைக்காட்சியில்தான் சினிமா, சீரியல்இரண்டும் இருக்கிறது. சினிமாவில் சீரியல் இல்லை. பெரும்பாலும், பெண்கள் தேர்ந்தெடுத்து சீரியல் பார்க்க பழக வேண்டும். மூளைச் சோர்வு அடையும்அளவுக்கு பார்க்கக் கூடாது.
யாடமிருந்து விலகியிருக்க வேண்டும்? ரெளடி? அரசியல்வாதி?
யாடமிருந்தும் விலகியிருக்க வேண்டிய அவசியமில்லை. யார் சமூகத்துக்கு தீமை பயக்கிறவர்களோ, அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் கண்டிக்கும் தைரியம்வேண்டும். அதற்கான ஆத்ம பலம் நமக்கு இருக்க வேண்டும்.
- மன்னை பாஸ்கர்
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications