பெங்களூரில் புத்தக கண்காட்சி
பெங்களூரில் தேசிய அளவிலான புத்தக கண்காட்சி நடைபெறுவதாகவும், அதில் தமிழகத்தைச் சேர்ந்தபதிப்பகங்கள் கடை விரித்திருப்பதாகவும் செய்தித்தாள்களில் படித்தேன். நீண்ட நாட்களாக வாங்க விரும்பும்புத்தகங்களின் பட்டியலைத் தயார் செய்து கொண்டு, பேலஸ் கிரவுண்ட் மேக்ரி சர்க்கிளுக்குப் போனேன்.
நான் போயிருந்தது செவ்வாய்க்கிழமையின் பிற்பகல் நேரம். வேலை நாள் என்பதால் குறைவான புத்தகப்பிரியர்களோடு கண்காட்சி சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. மற்ற மொழிப் புத்தகங்களின் மீது அவ்வளவுஅக்கறையில்லாததால் நேரே தமிழ் ஸ்டால்களை நாடிப் போனேன். முதலில் என்னை வரவேற்றது குமரன்பதிப்பகம்.
புத்தக கட்டைப் பிரித்துக் கொண்டிருந்தவர்களிடம், சேல்ஸ் எப்படியிருக்கிறது என்று மெதுவாகக் கேட்டேன்.பரவாயில்லை சார் என்று சொன்னார்கள். அதன்பின்பு நாதம் கீதம், திருமகள், நர்மதா, பூங்கொடி, கிழக்கு,யூனிவர்ஸல் பதிப்பகம் என்று ஒவ்வொரு தமிழ் ஸ்டாலிலும் ஏறி இறங்கினேன்.
நான் தேடிய புத்தகங்களில் இரண்டே இரண்டு மட்டும்தான் வாங்க முடிந்தது. ஜெயமோகனின் சங்க சித்திரங்கள்மற்றும் எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து. சல்மா, மாலதி மைத்ரி, மனுஷ்யபுத்திரன், வெண்ணிலா, மீராஆகியோரை எங்கேயும் பார்க்க முடியவில்லை.
எல்லா ஸ்டால்களிலும் சுஜாதா, வைரமுத்து, கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன், ரமணி சந்திரன் ஆகியோரதுபடைப்புகளும், விகடன் பிரசுரங்களும், சமையல், ஜோதிடம் சார்ந்த புத்தகங்களும் நீக்கமற நிறைந்திருந்தன.
நான் தேடிய புத்தகங்களைக் குறிப்பிட்டு, ஏன் சார் இதெல்லாம் கொண்டு வரவில்லை என்று உரிமையுடன் நாதம்கீதம் ஸ்டாலில் இருந்தவரிடம் கேட்டபோது, ரொம்பவும் மனவருத்தத்துடன் அவர் சொன்னார்.
எங்கே சார் அதெல்லாம் சேல்ஸ் ஆகுது? இந்த ஸ்டால் இடம் மொத்தம் 10க்கு 10 அடி. இதற்கு 9,000 ரூபாய் (10நாளைக்கு) வசூலிக்கிறார்கள். ஆனால் சென்னையில் புத்தக கண்காட்சி போடும்போது ரூ.6,000க்குள் முடிஞ்சிடும்.அதோடு விற்பனையும் அமோகமாக இருக்கும்.
இங்கே சனி, ஞாயிறு மட்டும்தான் விற்பனையிருக்குது. நான் மொத்தம் ஒரு லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள்வாங்கிக் கொண்டு வந்தேன். கொண்டு வருவதற்கான செலவு வேறு. வந்து கடையை விரித்தால், கண்காட்சிக்குஏற்பாடு செய்தவர்கள் முறையான விளம்பரம் செய்யவில்லை என்பது தெரியவந்தது.
பின்பு என்னுடன் வந்த மற்ற தமிழ்ப் பதிப்பகத்தாருடன் சேர்ந்து லோக்கலில் அதிகம் சேல்ஸ் ஆகும் தமிழ்ப்பத்திரிக்கையில் எங்களது கைக்காசு போட்டு விளம்பரம் கொடுத்தோம். இத்தனை பிரச்சினைகளுக்கு இடையேவிற்பனை எதிர்பார்த்தமாதிரி இல்லை. போன வருடத்தை விட இந்த வருடம் சேல்ஸ் கம்மி என்று தனதுஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.
அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஒரு ஸ்டாலுக்கு ரூ.9,000 வசூலிப்பவர்கள் அது குறித்துஏன் முறையான விளம்பரம் செய்ய மறுக்கிறார்கள்? வெளி மாநிலங்களில் இருந்து இவ்வளவு பணம் செலவழித்து,இங்கு வந்து ஸ்டால் வைத்து அவர்களே விளம்பரமும் செய்ய வேண்டும் என்பது கொடுமையில்லையா? இப்படிஇருந்தால் அடுத்த வருடம் அவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும்?
அப்புறம், பெங்களூர்வாழ் தமிழர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதா என்ன? இந்தியஅளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்கத்தை உடைய நகர் அல்லவா இது? இங்கு போன வருடத்தைவிட இந்த வருடம் புத்தக விற்பனை குறைவாக இருக்கிறது என்பதைக் கேட்கும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.
புத்தகக் கண்காட்சி வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. நேரம் இருக்கும் பெங்களூர்வாசிகள் கொஞ்சம் மாலைநேரத்தில் போய் வரலாமே?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications