Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொழி அழிந்தால் இனம் அழியும்!

Subscribe to Oneindia Tamil

இனங்கள், மொழிகளின் பன்முகத் தன்மை கொண்ட இடங்களே, இயற்கையின் பன்முகத் தன்மை கொண்டதாகவும் இருப்பதுஅசாதாரணமானமானது இல்லை. இவ்விரண்டிற்குமான தொடர்புகள் ஆழமானவை, ஆய்வு செய்து அறிய வேண்டியவை.

Language"குறியீடுகள் அழியும்போது, கருத்துக்கள் சாகின்றன. சிந்தனைகள் புதைக்கப்படுகின்றன" என்கிறார் சாகர் கான். அவர் ஒருமொழியியலாளர் அல்லர். ராஜஸ்தானின் லன்காஸ் பழங்குடியினத்திற்கே உரித்தான கமைச்சா எனும் நான்கு கம்பிகள் கொண்டஇசைக் கருவியை அழகுற வாசிக்கும் எண்பது வயது இசைக் கலைஞர்.

"இன்றைய தலைமுறையினர் இந்த இசைக் கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இது தவிர்க்க முடியாததே.இசையும் மொழி போல, ஒரு குறியீடுதான். அன்றாட வாழ்க்கைக்கான வாழ்வு முறையையும், கலாச்சாரத்தையும் மொழியையும்இழக்கத் துணிந்த பின் இசையையும், இசைக் கருவிகளையும் மட்டும் எப்படிக் காப்பாற்ற முடியும்? மொழியே செத்துக்கொண்டிருக்கிறது" என்று புலம்புகிறார் அந்த முதியவர்.

கசாக்கின் வட மேற்குப் பகுதியில் பேசப்பட்டு வரும் உபைக் மொழியின் கடைசி வாரிசான டிப்விக் செங்கை சில ஆண்டுகள் முன்சந்தித்தேன். அவருக்கு மூன்று மகன்கள். யாருக்கம் உபைக் மொழியைப் பேசத் தெரியாது. புரிந்து கொள்வது கூடச் சிரமம்.அவர்களுக்குத் துருக்கிய மொழியை மட்டுமே தெரியும். அவர்கள் அவர் இறக்கும் முன்பே அவருக்கான கல்லறைவாசகங்களைத் தயாரித்து விட்டனர்.

"இதுதான் டிப்விக் செங்கின் கல்லறை. உபைக் மொழியின் கடைசி வார்த்தை இவரால்தான் உச்சரிக்கப்பட்டது". 1992ல் செங்க்இறந்தார். அவருடன் அவரது உபைக் மொழியும் புதையுண்டு போனது.

அழிந்து வரும் மொழிகள் பற்றி ஆய்வு செய்து வரும் இங்கிலாந்துப் பேராசியர் ப்ரூஸ் கோனெல் மொழிகளின் இறப்பு எனும்கட்டுரையில், "1994ல் கொமிரான் நாட்டின் மம்பிலாக் பகுதியில் பல அற்புதமான மொழிகளைக் கேட்டேன். கசாபி எனும் மொழிபேசும் ஒரே மனிதராகப் போகோன் என்பவர் மட்டுமே இருந்தார்.

1995ல் நான் மீண்டும் கொமிரான் சென்றேன். போகோன் இல்லை. அவருடன் கசாபியும் இறந்து போனது. அவரது பேச்சைப்புரிந்து கொள்ளக் கூடியவராக இருந்த அவரது சகோதரி மட்டுமே உயிருடன் இருக்கிறார். அவருக்கும் அம்மொழியைப் பேசத்தெரியாது. அந்த வம்சத்தில் இனி அம்மொழி பேச யாருமே இல்லை" என்கிறார்.

ஒரு மொழி சாகும்போது, உயிர்த் துடிப்புள்ள ஒரு உலகையே இழந்து போகிறோம். மொழி அந்த வட்டாரத்தின் அறிவு, ஞானம்,வழக்கு, இயற்கை, உயினம் குறித்த அனைத்தையும் உட்கொண்ட ஞானச் செல்வம். மொழியின் சாவு இனத்தின் உயிர்த் துடிப்பின்சாவாகும்.

உலகில் 6,700 மொழிகள் பேசப்படுகின்றன. பேசும் மொழிகள் அனைத்தையும் கண்டுபிடித்துப் பட்டியலிடப்படவில்லை.இந்தோனேசியா, பப்வா கினியா, தென்னாப்பிரிக்கா, மத்திய ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் இன்றும் புதிய புதிய மொழிகள்கண்டுபிடிக்கப்படுகின்றன.

அவ்விதம் புதிய இரண்டு மொழிகள் பேசும் 30 குடும்பங்களே கொண்ட சிறு குழுக்கள், ஜகர்தாவிலிருந்து 2,000 மைல்தொலைவில் மம்பரமோ ஆற்றங்கரையில் (வஹூ டேட், அங்கேடேட் எனும் குழுக்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

"மொழிகளின் இறப்பு" நூலின் ஆசியர் டேவிட் கிங்டல் அவை புதிய மொழிகளே என உறுதி செய்கிறார். மொழி பற்றியகணக்கெடுப்புகள் நடத்தப்பட்ட பகுதிகளிலும் புதிய மொழிகள் பல தெரிய வருகின்றன.

மொழி ஆய்வுகள் குழப்பமாகவே உள்ளன. 6,700 மொழிகளில் பெரும்பாலானவை மிகச் சிலராலேயே பேசப்படுகின்றன. 10மொழிகளில் பேசுவோர் உலகின் மக்கள் தொகையில் சிலரே.

Languageசுவீடன் மொழியறிஞர் டோவ், "உலகின் மிகப் பலரால் பேசப்படும் மொழி கூட முழுமையாக அறியப்படவில்லை. இவற்றைமுறைப்படுத்தும் நெறிமுறை முடிவாகவில்லை. பெரிய மொழிகள் கூடப் புதிராக உள்ளன. நாம் பன்றிகளைத் தெரிந்து கொண்டஅளவு கூட மொழிகளைத் தெரிந்து கொள்ளவில்லை" என்று சலித்துக் கொள்கிறார்.

சராசரியாக 6,000 பேருக்கு ஒரு மொழி உள்ளது எனலாம். 300 (5%) மொழிகள் மட்டுமே 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர்பேசுகின்றனர். மீதம் 95 சதவீதம் 10 லட்சத்திற்கும் குறைவானவர்களாலேயே பேசப்படுகின்றன. பழங்குடி மொழிகளில் 1 கோடிப்பேர் பேசும் இன்கா இன மொழியும் பத்துப் பேரே பேசும் குருரிலம் எனும் பப்வாகினியா மொழியும் உள்ளன.

அழிவுப் பகுதிகள்:

மொழிகளுக்கும் பூமியின் நிலப்பரப்புக்கும் தொடர்பு உண்டா? உலகின் அதிக மொழிகள் பேசும் பகுதிகள் இரண்டு. மேற்குஆப்பிக்கா துவங்கி காங்கோ வழியாக கிழக்கு ஆப்பிக்கா வரை ஒன்று. மற்றது இந்தியா, தென்கிழக்கு ஆசியா, இந்தோனேசியா,பப்வாகினியா, பசிபிக் வரையிலானது.

இந்த வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள 17 நாடுகளில் 60 சதவீதம் மொழிகள் பேசப்படுகின்றன. இது நிலப்பரப்பில் 9 சதவீதம்மட்டுமே. இவையாவும் வளரும் ஏழை நாடுகள். உயினப் பன்முகத் தன்மை செறிந்தன.

உலகின் இயற்கைப் பன்முகத் தன்மை பெரிதும் ஆபத்துக்கு உள்ளான இப்பகுதியிலேயே அதிக மொழிகள் உள்ளன.

மொழி உரிமைக்காகப் போராடி வரும் டெரலிங்குவா எனும் அமைப்பு ஙிஙிஊ உடன் சேர்ந்து பழங்குடி இன மக்கள் பற்றியவரைபடம் உருவாக்க முயன்றது. அதில் மிகவும் அழிவுக்குள்ளான, ஆபத்துக்குள்ளான 200 பகுதிகளைக் குறிப்பிட்டனர்.இவற்றை உலகின் "200 இயற்கைப் பகுதிகள்" என்கின்றனர். இவை அதிக நீரும், நிலப்பரப்பும் கொண்ட சிறப்புப் பகுதிகள். இங்குஉயினங்கள், தாவரங்கள், இயற்கை வளங்கள் செறிந்துள்ளன.

அதுபோலவே, "இயற்கை மொழிக் குழுக்கள்" எனும் சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. இவை ஒரே வகையான மொழிக்கலாச்சாரம் கொண்ட இனக் குழுக்கள். இதைக் கொண்டே பிற குழுக்களிடமிருந்து இவற்றை வேறுபடுத்தி அறிய முடியும். 4,635தனிப்பட்ட இயற்கை மொழிக் குழுக்கள் இந்த 200 இயற்கைப் பகுதிகளிலேயே உள்ளனர் எனக் குறிப்பிடுகின்றனர்.

இது உலகின் இயற்கை மொழிக் குழுக்களில் 67 விழுக்காடு.

இயற்கைப் பன்முகத் தன்மை செறிந்த வெப்ப மண்டல மழைக்காடுகள் நிலப்பரப்பில் 7 சதவீதம் மட்டுமே. இதில்தான் உலகஉயிரினத்தின் 80 முதல் 90 சதவீத வகைகள் உள்ளன. இங்குதான் உலகின் அதிகமான கலாச்சாரக் குழுக்கள் உள்ளனஎன்கிறார்கள்.

1,400 தனித் தன்மை வாய்ந்த நாட்டுப்புறப் பழங்குடியினர் வாழ்கின்றனர். கடலை ஒட்டிய அலையாத்திக் காடுகளில் 2,880பழங்குடி இன மக்கள் (62%) வாழ்கின்றனர்.

எனவே உலகின் 200 இயற்கைப் பகுதிகள் அதிகமான இயற்கை வளங்களைப் பன்முகத் தன்மையை மட்டும் கொண்டதாகஅன்றி, உலகின் அதிகபட்ச மனித இனப் பன்முகத் தன்மையையும் கொண்டுள்ளது உறுதியாகிறது.

இது எதிர்பாராத ஒற்றுமையா?

வாஷிங்டன் மானுடவியல் பேராசியர் கிரீக். ஏரிஸ்மித் தென் அமெக்காவின் மொழி, கலாச்சாரப் பன்முகத் தன்மைக்கும்,இயற்கைப் பன்முகத் தன்மைக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்வு செய்தார்.

ஐரோப்பியர்கள் இங்குக் காலடி எடுத்து வைத்தபோது இங்கு 275 மொழிகள் பேசப்பட்டு வந்தன. இயற்கை, பண்பாடு, மொழிஇவற்றைத் தனித்தனியாகவும் ஒப்பிட்டும் ஆய்வுகள் மேற்கொண்டார்.

மரங்களின் அடர்த்திக்கும், மொழிகளுக்கும் உள்ள தொடர்பு இந்த ஒப்பாய்வில் தெளிவானது. மரங்களடர்ந்த வனப்பகுதியில்பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கண்டுபிடித்தார். இதை டோவ்வின் ஆய்வும் உறுதி செய்கிறது.

"இயற்கைப் பண்பாட்டுப் பன்முகத் தன்மையும், மானுடத்தின் உருவாக்கம்" என்ற நூலின் ஆசிரியர் டேவிட் ஹார்மோன்,இயற்கையின் பன்முகத் தன்மையே மொழியையும், மக்கள் வாழ்வு முறைகளையும் முடிவு செய்கிறது என்கிறார்.

பல்வேறு வேறுபாடுகள் கொண்ட இயற்கைச் சூழல், பெரிய நிலப்பரப்பு, தீவுகள், வெப்ப தட்ப நிலை ஆகியன மொழிகளின்உருவாக்கத்திற்கு அடிப்படை காரணம் என்கிறார்.

Worldமக்கள் இயற்கையுடன் நெருக்கமாக வாழும்பொழுது அதன் ஒலி, தாக்கம் பாதிப்புகள் ஆகியவற்றிற்கு ஏற்பச் சிறப்பு ஒலிவடிவத்தை மனிதன் உருவாக்கிக் கொள்கிறான். எனவே சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப மொழிகள் ஒவ்வொரு இனக்குழுவினும்தனித் தன்மையுடன் உருவாகின.

குறியீடுகளாக உருவான ஒலிகள் படிப்படியாக மொழிகளாகவும், பண்பாட்டுச் சிறப்புத் தனித் தன்மையாகவும் உருவாகின.பூகோள அமைப்பும், கலாச்சாரப் பாதிப்பும் மொழியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கை வளங்களைச்சார்ந்தே மக்களின் பார்வையும் கருத்தும் மொழிகளும் உருவாகின.

பழங்குடி மக்கள் இயற்கையின் இந்தப் பங்களிப்பை உணர்ந்து ஏற்றிருந்தனர்.

இயற்கைச் சாவா? செயற்கைக் கொலையா?

அலாஸ்கா சுதேசி இன மக்கள் மொழியியல் மையத்தின் தலைவர் மைக்கேல் குரூஸ், "போகும் போக்கைப் பார்த்தால் இந்தநூற்றாண்டில் 90 சதவீத மொழிகள் சாவைச் சந்திக்கும். சிலர் 50 சதவீதம் மொழிகள் மட்டுமே சாகும் என்கின்றனர். கனடாவில்உள்ள 187 மொழிகளில் 149 மொழிகள் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுவதில்லை. பேசப்படும் 60 மொழிகளில் 4 மட்டுமேஉறுதியான அடித்தளத்துடன் நிற்கின்றன.

பழங்குடி மக்களின் 250 மொழிகளில் 90 சதவீதம் சாவின் விளம்பில் உள்ளன என்கிறார்.

மங்கி வரும் குரல்கள் நூலின் ஆசிரியர் டேனியல் நெட்டில் "பழங்குடி மக்களின் மொழியில் ஒன்றோ, இரண்டோதான் அடுத்தநூற்றாண்டின் ஒளியைக் காணும். ஆப்பிரிக்காவிலும் நிலைமை வேறாக இல்லை. அங்குப் பதிவு செய்யப்பட்டதில் 54 மொழிகள்சுவடற்றுப் போய் விட்டன. 116 மொழிகள் அதே அழிவின் பாதையில் செல்கின்றன" என்கிறார்.

ஒரு மொழியைப் பேசும் மக்களினம் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கொல்லப்பட்டால், அவர்கள் சார்ந்த மொழிஇயற்கையான சாவை எட்டி விடுகிறது. ஒரு நாடு தேசியப் பொதுக் கொள்கை, தேசிய மொழி, மையப்படுத்துதல், வளர்ச்சி, வசதி,உயர்கல்வி நவீனமயமாதல், முன்னேற்றம், பொருளாதாரம் என எத்தனையோ காரணங்களை முன் வைத்து மக்களின் பன்முகத்தன்மையையும் அவர்களின் கலாச்சார வெளிப்பாடான மொழிகளையும் அழிக்கலாம்.

உலகின் கலாச்சாரங்களின் வெளிப்பாடான மொழிகளின் சாவுக்கு உலகமயம் ஒரு முக்கியமான காரணமாக உருவெடுத்துவருகிறது. தொழில்நுட்பப் படையெடுப்பு மொழியின் சாவை விரைவுபடுத்துகிறது. பெரும்பான்மையினரின் மொழியின்ஆதிக்கம், மொழிகளின் இன வழித் தனித் தன்மையின் அழிவுக்குக் காரணமாகிறது. கனடாவில் வந்தேறிய ஆங்கிலம்,அம்மக்களின் இனக்குழு மொழிகளை வென்றது.

தென் அமெக்காவில் ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் மொழிகள் பழங்குடிகளின் மொழிகளைக் கொலை செய்தன. இந்தியாவில்வெள்ளையருடன் வந்த ஆங்கிலம், சுதேசி மொழிகளை அழித்தது பழைய வரலாறு.

இன்று இந்தி, சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பெறுவதும், மொழிகளின் அழிவின் தொடர்ச்சியாகவே இருக்கும். உலகப் பொதுமொழியாக்கப்பட்டு வரும் கணினி மொழியின் தாக்கம் குறித்தும் விரிவான ஆழ்ந்த கண்காணிப்பும், ஆய்வும் தேவை.

- ஜீவா([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+