Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வலைப்பதிவுகள்(BLOGS)

Subscribe to Oneindia Tamil

சென்ற ஆண்டின் ஆன்லைன் ஆங்கில அகராதிகளில் அதிகமாக தேடப்பட்ட சொல் எது தெரியுமா? Blog என்ற சொல்! இது, புகழ்பெற்றமெர்ரியம் -வெப்ஸ்டர் ஆங்கில அகராதிப் பதிப்பகத்தினரால் 2004ம் ஆண்டின் மிக முக்கியமான சொல் (the word of the year) என்றுதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதிலிருந்து இந்தச் சொல்லின் பிரபலத்தைப் புரிந்துகொள்ளலாம். உண்மையில் blog என்பது weblogஎன்ற சொல்லின் சுருக்கமாகப் பிறந்து, இன்று தனியான சொல்லாகவே நிலைபெற்றுவிட்டது. Blog என்பதன் பொருள்தான் என்ன?

a Web site that contains an online personal journal with reflections, comments, and often hyperlinks provided by thewriter என்பது அதற்கான விளக்கம். தமிழில் சொல்வதானால், தனியாள் ஒருவர், தன் எண்ணங்களை, கருத்துக்களை, ஆங்காங்கேசுட்டி(hyperlink)களுடன் பதிவு செய்யும் ஒரு இணையத்தளம் எனலாம்.

செய்தி நிறுவனங்கள், நாளிதழ்கள், வார/மாத இதழ்கள் ஆகியவை அரசியல்/வணிகக் காரணங்களின் தாக்கத்தால் ஒரு சார்புநிலைஎடுக்கவோ, மேம்போக்கான பார்வை கொள்ளவோ வாய்ப்பிருக்கிற விஷயங்களில் கூட, கட்டுப்பாடற்ற, பரவலான, பன்முகப்பார்வைகொண்ட கருத்துக்களையும் சிந்தனைகளையும் இணைய வாசகர்களுக்கு வலைப்பதிவுகள் அளிக்கின்றன. (வைய விரிவு வலையில்பதிவு செய்யப்படுவதால், தமிழில் வலைப்பதிவுகள் என்று சொல்லலாம்.) இதனால் படிப்பறிவும், சுதந்திர வேட்கையும், வசதிவாய்ப்புகளும் அமைந்திருக்கும் மேற்கத்திய சமூகங்களில் இன்று வலைப்பதிவுகள் ஒரு பெரிய மாற்று ஊடகமாக வளர்ந்துவருகின்றன.

இன்றைக்கு சுமார் அறுபது லட்சம் (ஆம், 60 00 000!) வலைப்பதிவுகள் இருக்கலாம் என்று ஒரு கணக்கு சொல்கிறது. முதலில், தமிழில்வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றனவா? ஆமாம், இன்று தமிழில் முன்னூறுக்கும் ம்ேற்பட்ட வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. 60லட்சத்தோடு ஒப்பிடும்போது 300 மிகக் குறைவாகத் தெரியலாம். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பல மொழி புழங்கும்சமூகத்தில், வலைப்பதிவுகள் இப்போதுதான் வளர ஆரம்பித்திருப்பதால், இந்த எண்ணிக்கையே ஆரோக்கியமானதே.

சொல்லப்போனால், இன்று இந்திய மொழிகளிலேயே அதிகம் வலைப்பதிவுகள் எழுதப்படுவது தமிழில்தான். இன்னும் இணையத் தொடர்புவசதிகள் முன்னேறும்போது, பன்மொழியிலும் எளிதில் எழுத ஏதுவாக கணினி நுட்பம் வளரும்போது, கட்டாயம் இந்தியாவிலும்வலைப்பதிவுகள் கவனிக்கத்தக்க மாற்று ஊடகமாக வளரும் வாய்ப்பு உள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க தேர்தல் சமயத்தில் பிரச்சாரம், விஜாதம், ஆதரவு திரட்டல் ஆகிய செயல்களில் வலைப்பதிவுகளின் பங்குகணிசமாக இருந்தது. சமீபத்தில் கடல் பெருக்கால் தெற்கு ஆசியாவில் ஏற்பட்ட சேதங்கள் வலைப்பதிவுகளில் வெளியிடப்பட்டதும், உலகஅளவில் பல வலைப்பதிவர்கள் நேரடித்தகவல்களை எழுதி பாதிக்கப்பட்டோரின் அவலத்தை, மீட்பு/நிவாரணப் பணிகளின்தேவைகளையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியதும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது ஜனவரி 6ம் தேதியிட்ட தி இந்துஆங்கில செய்தித்தாளின் தலையங்கத்திலேயே குறிப்பிடப்பட்டது.

சரி, தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகளை எங்கே காணலாம்? எப்படி வலைப்பதிவுகள் வெளியே தெரியும்? யார் என்னஎழுதுகிறார்கள் என்று எப்படித் தெரிந்துகொள்வது?

தமிழில் வலைப்பதிப்போர் ஒரு கூட்டு சமுதாயமாக பல முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றுள்ளார்கள். முக்கியமாக வலைப்பதிவுகள்பட்டியல் ஒன்று கடந்த 18 மாத காலமாக இயங்கி வருகிறது. அதன் இணைய முகவரி: http://tamilblogs.blogspot.com

இத்துடன், எந்த வலைப்பதிவில் இன்று புதிதாக என்ன எழுதப்பட்டுள்ளது என்று சுடச்சுட தகவலைத் திரட்டி, பட்டியலிட்டுவலைப்பதிவுகளை வாசிக்க வசதியாக அமைத்திருக்கிறது தமிழ்மணம்.காம் என்ற வலைவாசல் (போர்ட்டல்). இங்கே வலைப்பதிவுநுட்பத்தை அறிந்துகொள்ள தொடுப்புகளும் விவாதிக்க ஊடாடு மன்றமும் அமைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுதும் இருந்து தமிழில்வலைப்பதிக்கும் நூற்றுக்கணக்கான ஆர்வலர்களுக்கு ஒரு அரங்கமாக தமிழ்மணம் வலைவாசல் திகழ்கிறது. இதன் இணையமுகவரி: www.thamizmanam.com

இணையத்தமிழ் வாசகர்களுக்கு வித்தியாசமான ஒரு வாசிப்பு அனுபவம் வலைப்பதிவுகள் மூலம் கிடைக்கிறது என்றால் அது மிகையல்ல.இதன்மூலம் தமிழில் கணினி நுட்பமும் கூட வளர்வதும் இன்னொரு கூடுதல் பயன். நீங்களும் வலைப்பதிவுகளை வாசித்துப்பாருங்கள்.உங்களில் சிலர் கட்டாயம் உடனே உங்களுக்கென்று ஒரு வலைப்பதிவையும் தொடங்கி எழுதவும் கூடும். இது உங்களுக்கு நல்லதொருபயனுள்ள பொழுதுபோக்காக அமையும் என்பதில் ஐயமில்லை.

- காசி ஆறுமுகம்([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+