நெஞ்சில் உரமின்றி நேர்மை திறமும் இன்றி!
இந்தியா-பாகிஸ்தான் உறவு புரிந்து கொள்ளவே முடியாத அதிசயம். ஆனால் இரு நாட்டு அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளோ அதிசயத்திலும் அதிசயம். அத்வானி விஷயத்தில் நடந்திருப்பதும் அது தான்.
1989ம் ஆண்டு முதன் முதலாக 80 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி அரசியல் அங்கீகாரம் பெறத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை அத்வானி எடுத்த அவதாரங்கள்பலப்பல.
1990ம் ஆண்டு வி.பி.சிங் அரசை கவிழ்ப்பதற்கு அவர் தொடங்கிய ரதயாத்திரை தான் பாபர் மசூதி இடிக்கப்பட முக்கிய காரணம் என்று அறியாச் சிறுவனுக்குக் கூட தெரியும். இந்தியாவின் பலமாநிலங்களிலும் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் புறப்பட்டுப் போன ரதயாத்திரை தான் இந்தியா முழுவதிலும் இருந்து மதத்தீவிரவாதிகளை அயோத்தி நோக்கி திருப்பியது.
அடுத்த இரு ஆண்டுகளில் செங்கல் செங்கல்லாக கொண்டு போய் அயோத்தியில் குவித்தார்கள். இராமருக்கு கோவில் கட்ட என நாடெங்கும் செங்கல் பூஜை நடத்தி பெறப்பட்ட செங்கற்கள் மட்டும் பலகோடி.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியை நாள் குறித்தார் அத்வானி. அவருடைய முழக்கம் அன்றைக்கு ஒன்றே ஒன்று தான். பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்தார். அந்த இடத்தில்தான் இராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார் அத்வானி.
அவருக்கு துதி பாடிய முக்கிய சீடர்கள் உமா பாரதி, விநய் கட்டியார், முரளி மனோகர் ஜோஷி போன்ற மகானுபாவர்கள்.
அயோத்தியில் டிசம்பர் 6ம் தேதி கூடிய மக்கள் ஒன்றும் பஜனை பாட அங்கு வரவில்லை. லட்சக்கணக்காக அங்கு கூடியிருந்த மக்கள் உணர்வு பூர்வமாக நான்கைந்து வருடங்களாக உணர்ச்சியை ஏற்றிவிடப்பட்ட கூட்டம்.
கோயில் கட்டியே தீருவேன் என்பதை விட, பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கடப்பாரை, கத்திகளோடு கூடியிருந்தது அந்தக் கூட்டம். அவர்களை அத்தனை வருடங்களாய்உருவேற்றியிருந்ததில் அத்வானியின் பங்கு அளப்பரியது.
அந்தக் கூட்டம் பாய்ந்து போய் பாபர் மசூதியை இடித்த போது, அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் முகத்தில் பொங்கிய ஆனந்தத்தை தொலைக்காட்சியிலே பார்க்காதவர்கள் மிகவும் குறைவு.
அந்த செயலுக்காக அத்வானி மீது வழக்கு போடப்பட்ட போதும், அதற்குப் பின்னரும் இந்த 13 வருடத்தில் ஒரு முறை கூட அவர் தன்னுடைய செயல் குறித்து வருத்தமோ, கவலையோவெளியிட்டதில்லை.
ஆனால் திடீரென்று பாகிஸ்தான் போய் ஏன் பாவமன்னிப்பு கேட்பானேன். "சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று ஒரு பழமொழி உண்டு. அத்வானிக்கு பொருத்தமாக சொல்லப்பட்டது தான் அது.
வாஜ்பாய்க்கு வயதாகி விட்டது. கட்சியில் பிடியும் தளர்ந்து விட்டது. இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிக்கும். அதே வேளையில் கட்சியும் அத்வானியின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஆனால் சோனியா காந்தியை எதிர்த்து எப்படி அரசியல் நடத்துவது? அவர் ஏற்கனவே மன்மோகன் சிங்குக்கு அரியணையை தாரை வார்த்து கொடுத்து விட்டு உலக அளவில் அரசியல் தியாகி என்றுபெயர் வாங்கி விட்டார்.
தன் பெயருக்குப் பின்னால் எப்போதும் களங்கமாக மசூதியை இடித்த பாவம் சுற்றுவதை தொலைத்தால் தான் விமோசனம் என்றும், புதிய சமாதானத் தூதுவராக அடையாளம் காட்ட முடியும்எனவும் தீர்மானித்து நடத்தப்பட்ட நாடகம் தான் பாகிஸ்தான் மேடையில் அரங்கேறியது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது தன் வாழ்நாளில் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என உருகினார். பாகிஸ்தான் பத்திரிகைகளும் அத்வானி தான் அப்பழுக்கற்ற புடம் போட்ட தங்கம் என எழுதி தீர்த்தன.
இதில் பாவம் பாகிஸ்தான் மக்கள் தான். அவர்களும் ஒரு காலத்தில் நம்மோடு இருந்தவர்கள் தானே. அதனால் நம் மக்களைப் போல அவர்களும் இந்த நாடகத்தை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இதில் ஜின்னாவுக்கு பாராட்டு மழை வேறு! அதை வைத்து இங்குள்ள ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி பரிவாரங்கள் கூக்குரலிட, ராஜினாமா... தேசிய மன்றக்கூட்டம்... தீர்மானம் என இந்ததிரைப்படம் நீண்டு கடைசியில் ராஜினாமா வாபஸ் என சுபமாக முடிந்தது.
இதில் விநோதம் என்னவென்றால், கடைசியில் அக்கட்சியின் தீர்மானத்தில் ஜின்னாவின் மீது வசைமாரி பொழிந்து தள்ளி இருப்பது தான். அதற்குப் பின்னர் தான் அத்வானி திருப்திகரமாக தனதுராஜினாமாவை வாபஸ் பெற்றார்.
இதெல்லாமே "நீ அடிப்பது போல் அடி, நான் அழுவது போல் அழுகிறேன் என்பது போல சொல்லி வைத்து நடத்தப்பட்ட மிக அழகாகத் திட்டமிட்ட நடிப்புத் தான்.
கட்சியின் தலைவராக அத்வானி இருக்கும் போதே, அவர் பாகிஸ்தானில் புகழ்ந்த ஜின்னாவுக்கு எதிராக இங்கு தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் விதத்தைப் பார்க்கும் போது இந்த சம்பவத்தைதநாடகம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
என்ன செய்வது? கேட்பதற்கு அறியாத ஜனங்கள் ஆயிரம் பேர் இருந்தால் யாரும் எதுவும் சொல்லலாம். ஏனென்றால் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பாவி ஜனங்கள் எந்தக் கேள்வியும் கேட்கப்போவதில்லையே.
ஆனால் காலம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள். காலத்தை விடவும் மெய்யான சாட்சி இவ்வுலகில் எதுவும் இல்லை.
இதையெல்லாம் பார்க்கும் போது, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்திற்கு சென்று விட்டு வந்த அறிஞர் அண்ணா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது:
""வரலாற்றிடமிருந்து யாரும் பாடம் படிப்பதே இல்லை
- இரா.குறிஞ்சிவேந்தன்([email protected])
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications