தனித் தமிழ்ப் பெயர்களுக்கு இரண்டாயிரம் வெள்ளிகள் பரிசு
உலகம் முழுவதும் சுமார் 12 கோடி தமிழர்கள் வசிப்பதாக, அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற உலகத் தமிழர்பேரமைப்பு மாநாட்டில் கூறப்பட்டது. தமிழகத்தில் சுமார் 7 கோடி தமிழர்கள் வசிக்கிறார்கள். தமிழகத்தில் வாழும்தமிழர்களை விட, அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் நம் தாய்த்தமிழ் மீது கொண்டிருக்கும் பற்றும், பாசமும்அளவிட முடியாதது.
தூய தமிழைக் கேட்க விரும்புவர்கள், தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றாக வேண்டும் என்றளவுக்குதமிழகத்தில் தமிழ் மொழி கவனிப்பாரற்றும், வெளிநாடுகளில் சீரும் சிறப்பும் பெற்றும் திகழ்கிறது.
வேலை தேடியும், அகதிகளாகவும் அந்நிய மண்ணில் நுழைந்த தமிழர்கள் தங்களை அங்கு நிலைப்படுத்திக்கொண்டு, அந்தந்த நாடுகளை வளப்படுத்தி வருகின்றனர். அதோடு தங்களுக்கென ஓர் அமைப்பை அந்தந்தப்பகுதிகளில் ஏற்படுத்திக் கொண்டு, தமிழுணர்வு குன்றாமல் வாழ்ந்து வருகிறார்கள். அத்தகைய அமைப்புகளில்ஒன்றுதான் கனடா நாட்டில் இயங்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்.
தங்கள் குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர் வைக்கும் பெற்றோர்க்கு இந்த அமைப்பு பரிசு வழங்கி வருகிறது.
2004 ஆம் ஆண்டுக்கான தனித் தமிழ்ப் பெயர்களுக்கு உரிய பரிசை 2,000 வெள்ளிகளாக அதிகரித்துள்ளது.இந்தப் பரிசுத் தொகை தமிழீழம், இலங்கை, கனடா உட்பட புலம் பெயர்ந்த நாடுகளுக்கு பங்கிட்டுக்கொடுக்கப்படும்.
இந்தப் பரிசுத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் பெற்றோர்களிடம் இருந்து அதற்கான விண்ணப்பங்கள்கேட்கப்படுகின்றன.
1999--2004 ஆம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்கள் யாவும் 2005 தைத் திங்கள் (சனவரி) 07ஆம் நாளுக்கு முன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். அதன் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள்புறக்கணிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் தகுதிபெறும் பட்சத்தில் குடவோலை மூலம் பரிசு பெறுபவர்தேர்ந்தெடுக்கப்படுவார்.
கழகத்தின் முடிவே இறுதியானது. எதிர்வரும் பொங்கல் நாளன்று முருகன் கோவில் அரங்கில் நடைபெற இருக்கும்தமிழ்ப் புத்தாண்டு விழாவில் கனடாவிற்கு உரிய பரிசு (சனவரி 14, 2005 வெள்ளி மாலை 6.00 மணி)வழங்கப்படும். ஏனைய பரிசுகள் அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பப் படிவ மாதிரி
1) குழந்தையின் பெயர்---------------------------------------:
2) பிறந்த நாள்-------------------------------:
3) பிறந்த இடம்:--------------------------
4) தாயாரின் பெயர்--:--------------------------------
5) தந்தையாரின் பெயர்----------------------------------:
6) முகவரி-----------------------------------------------------------:----
7) தொ.பே. இல.--------------------------------------------
குழந்தையின் பெயரை உறுதிப் படுத்தும் பிறப்புச் சான்றிதழின் படி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில்தரப்பட்டுள்ள தரவுகள் உண்மையானவை என இத்தால் உறுதிப்படுத்துகிறோம்.
தாயாரின் கையெழுத்து
தந்தையாரின் கையெழுத்து
அனுப்ப வேண்டிய முகவரி
Secretary,
TCWA,
2857 Lawrence Avenue East Unit #14,
Scarborough
Ontario. M1P 2S9
CANADA
தொடர்பு: தொ.பேசி - (416) 281 1165 (416) 447 6314 (905) 949 0824
தொலைப் படி- (416) 261 6745
மின்னஞ்சல்: ([email protected])
நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்
நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications