• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரியாறுக்காக டெல்லியை மிரட்டாதது ஏன்?-பழ. நெடுமாறன்

By Staff
|

Nedumaranமத்திய அமைச்சரவையில் இந்த இந்தத் துறைகள் தந்தால் தான் ஏற்போம் இல்லாவிட்டால் என டெல்லியைமிரட்டியவர்கள் பெரியாறு அணைப் பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்பை நடைமுறைப்டத்தாவிட்டால் ஆதரவைவாபஸ் பெறுவோம் என்று ஏன் சொல்லவில்லை? என்று கேட்டுள்ளார் தமிழர் தேசிய இயக்க தலைவர்பழ.நெடுமாறன்.

சென்னையில் நடைபெற்ற தமிழகப் பொன்விழாவில் பழ. நெடுமாறன் ஆற்றிய உரை:

இந்த நாள் ஒரு சிறந்த நாள். ஒவ்வொரு தமிழனும் எண்ணிப் பார்த்துப் பெருமைப்படுகின்ற நாள். 50 ஆண்டுகாலமாக இந்தத் தமிழகம் உருவாகி வளர்ந்து வந்து இருக்கின்ற நாளை கொண்டாடி மகிழ நாம் இங்கே கூடிஇருக்கிறோம். இதிலே கட்சிகளுக்கு இடம் இல்லை, மதங்களுக்கு இடம் இல்லை, சாதிகளுக்கு இடம் இல்லை.எல்லோரும் தமிழர் என்ற உணர்வோடு நாம் இங்கே கூடி இருக்கிறோம்.

புறநானூறு தரும் செய்தி:

50 ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழகம் எப்படி இருந்தது? எங்கே இருந்தது? நம்முடைய வரலாற்றை,நம்முடைய அறிஞர்கள் எல்லாம் தொகுத்து இருக்கிறார்கள். குறைந்தபட்சம் 5,000 ஆண்டுகள் என வைத்துக்கொண்டால் கூட இந்த 5,000 ஆண்டுக் காலத்திலே நம்முடைய தமிழகம் ஒன்றாக இருந்ததே இல்லை.

சங்காலத்திலே சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நாடுகளாக பிரிவுபட்டுக் கிடந்தது. அதற்குப் பின்னாலேபல்லவர்களும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஒரு பகுதியை ஆண்டார்கள். ஏராளமான குறுநில மன்னர்கள்வேளிர்கள் என்ற பெயரிலே ஆங்காங்கு ஆண்டார்கள்.

நம்முடைய புறநானூற்று இலங்கியத்தில் சேரனுக்கும், சோழனுக்கும் நடந்த போரை, சோழனுக்கும்,பாண்டியனுக்கும் இடையே நடந்த போரை, ஆக தமிழர்கள் மோதிக் கொண்ட அந்தக் காட்சிகளை, அதிலேஅவர்கள் காட்டிய வீரத்தைத்தான் புறநானூறு நமக்கு எடுத்துச் சொல்கிறது.

நம்மை இணைப்பது தமிழ்:

5,000 ஆண்டுக்காலமாக நம்முடைய தமிழகம் ஒன்றுபட்டு இருந்தது இல்லை. ஆனாலும் கூட அடிப்படையானஒன்று அனைத்து தமிழர்களையும் ஒன்றுபடுத்தியது. அதுதான் மொழி. அதன் அடிப்படையில் அமைந்ததுநம்முடைய பண்பாடு. இந்த இரண்டும் இணைந்து தமிழர்களை ஒன்றுபடுத்தி இருந்தது.

சேர, சோழ, பாண்டிய நாட்டிலே வாழ்ந்த தமிழர்களுக்குச் சேரப் பண்பாடு, சோழப் பண்பாடு, பாண்டிய பண்பாடுஎன்று உருவாகிவிடவில்லை. அடிப்படையில் நம்முடைய பண்பாடு ஒன்றாகவே இருந்தது. எந்த நாட்டுக்தமிழனாக இருந்தாலும், அவன் மொழியால் இணைக்கப்பட்டான். அந்த மொழி தான் 5,000 ஆண்டுக்கலாமாகநம்மை இணைத்து வைத்து இருக்கிறது.

பிற்காலத்திலே விஜயநகர மன்னர்கள், முஸ்லிம் மன்னர்கள், மராட்டியர்கள் அதற்குப் பின்னாலேஆங்கிலேயர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர் என்று எத்தனையோ பேர் இந்தத் தமிழகத்தின் மீதுபடையெடுத்து ஒவ்வொரு பகுதியைப் பிடித்து ஆண்ட காலத்திலும் நாம் பிளவுபட்டுத்தான் கிடந்தோம்.

ஆங்கிலேயர் உருவாக்கிய சென்னை மாகாணம்:

ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் இந்தியா முழுவதையும் அடிமைப்படுத்தி ஆண்ட போது கூட நம்முடையதமிழகத்தோடு, ஆந்திரத்தின் சில பகுதிகள், தென் கன்னட மாவட்டம், மலபார் மாவட்டம் போன்றவற்றைஎல்லாம் இணைத்து சென்னை மாகாணம் என்று சிறைக்கு உள்ளே தமிழகத்தை அடக்கி வைத்தார்கள். ஆகநம்முடைய தமிழகம் ஒருபோதும் தமிழ் பேசும் மக்களின் நாடாக விளங்கியதே இல்லை. இது ஒரு பெரியசோகச் சித்திரம்.

பண்பாட்டுப் படையெடுப்பு:

எத்தனையே படை எடுப்புகள் நடந்தன. வடமொழியின் பண்பாட்டுப் படையெடுப்பு, அதுவும் கிட்டத்தட்ட 3,000ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடந்தது. நம்முடைய மொழியை, பண்பாட்டை, கலைகளை எல்லாவற்றையும் அதுஆக்கிரமிக்க முயற்சி செய்தது. ஆனாலும், அதற்கு நடுவேயும், நம்முடைய முன்னோர்கள் ஓரளவுக்குப்பாதுகாத்தார்கள். நம்முடைய தமிழின் தனித்தன்மையை ஓரளவுக்கு நிலை நிறுத்தினார்கள்.

வெள்ளைக்காரன் போய் இந்தியத் துணைக்கண்டம் விடுதலைப் பெற்றதற்குப் பிற்பாடு, நம்முடைய தமிழகம்மொழிவழி மாநிலமாக ஆக வேண்டும் என்ற கோரிக்கை இங்கேயும் எழுந்தது. இந்தியா முழுவதும் எழுந்தது.

காந்தியடிகள் உணர்ந்த உண்மை:

விடுதலைப் போராட்டக் காலத்திலே 1920 ஆம் ஆண்டு காந்தி அடிகள் இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப்பொறுப்பை ஏற்றபோது அவர் ஒரு உண்மையை உணர்ந்தார். இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. வெவ்வெறுமொழி பேசுகின்ற நாடுகளைக் கொண்ட ஒரு பெரிய துணைக்கண்டம் என்பதை உணர்ந்தார்.

அந்தந்தப் பகுதியிலே அந்தந்த மொழி மக்கள் நடுவே, அந்தந்த மொழி பேசித்தான் அவர்களை ஒன்று திரட்டமுடியுமே தவிர, வேறு வழியிலே அவர்களை ஒன்று திட்ட முடியாது என உணர்ந்தபோது, மொழிவழி மாநிலம்என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சியை முதலில் மொழிவழியாகப் பிரித்தார்.

அன்றைக்கு ஒன்றுபட்டு இருந்த சென்னை மாகாணத்திலே தமிழ்நாடு காங்கிரஸ் தனி, ஆந்திர காங்கிரஸ் தனி,மலபார் காங்கிரஸ் தனியாகத்தான் இயக்கியது. இப்படி இந்தியா முழுவதும் மொழிவழியாக காங்கிரஸ் கட்சிபி>க்கப்பட்டது.

இந்தியா விடுதலை பெற்றபின், மொழியின் அடிப்படையில் இந்த நாடு பிரித்துச் சீரமைக்கப்படும் என்றுவாக்குறிதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டது. 1946ம் ஆண்டு மெளலானா அப்துல் கலாம்ஆசாத் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த போது, பிரிட்டிஷ் அமைச்சரவைத் தூதுக்குழுவிடம் காங்கிரஸ்சார்பிலே அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான விண்ணப்பதில் அதைக் குறிப்பிட்டார்கள்.

மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்படும். மத்தியில் சில அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். எஞ்சியஅதிகாங்கள் மாநிலங்களைச் சார்ந்து இருக்கும் மாநிலங்கள் தன்னாட்சி உரிமையுடன் இயங்கும் என்று காங்கிரஸ்கட்சியே ஏற்றுக்கொண்டு அதிகாரப்பூர்வமாக பி>ட்டிஷ் தூதுக்குழுவிடம் அதை அளித்தனர்.

காந்தி கூட இதை வரவேற்று பேசும் பொழுது, தன்னால் இதுவரை தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்ததற்குஆசாத் திட்டம் உறுதியான தீர்வை அளித்துவிட்டது. இதை நான் வரவேற்கிறேன். இதை எல்லோரும் இதைஏற்றுக்கொண்டால் இந்தியா பிரிவினையாகாது என்று அவர் சொன்னார்.

ஜின்னா அவர்களும் இதை ஏற்றுக் கொண்டார். அவர் மறுக்கவில்லை. ஆனால் பின்னால் காங்கிரஸ் தன்னுடைநிலைப்பாட்டிலே இருந்து பின்வாங்கியபோது ஜின்னாவும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டியசூழ்நிலை ஏற்பட்டது. அது ஒரு பெரிய கதை. இந்தியா விடுதலை பெற்ற பின்னால் மொழிவழியாக மாநிலங்கள்பிரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையில் இருந்து காங்கிரஸ் தலைமை பின் வாங்கியது.

நேரு, படேலின் தவறான கண்ணேட்டம்:

நேரு பிரதமராக இருந்த போது துணைப் பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேலும், அவர்களைப் போன்றமுக்கியமான தலைவர்களும் மொழி வழியாக நாட்டைப் பிரித்தால் நாட்டின் ஒருமைப்பாடு சிதறிப்போகும் என்றுஅஞ்சினார்கள். இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிரிந்து போன பிறகு மிகப்பெரிய கலவரங்கள்நடைபெற்று, லட்சக்கணக்கான மக்கள் உயி>ழந்தனர்.

இந்த சூழ்நிலையில் பலமான மத்திய அரசு அமைக்கப்பட்டால்தான் இந்த நாட்டை ஒற்றுமையாக வைக்க முடியும்என்று அவர்கள் ஒரு தவறான கண்ணோட்டத்தில் பிரச்சனையை அணுகத் தொடங்கினார்கள். மொழி வழியாகமாநிலங்களைப் பிரிக்க முடியாது என்று மறுத்தனர். அதற்கு உரிய நேரம் இதுவல்ல. நேரம் வரும் போது அதைப்பிரிக்கலாம் என்று பிரச்சனையை ஆறப்போட்டார்கள். ஆனால், மக்கள் அதை ஏற்கவில்லை.

ஆந்திராவிலே பொட்டி ராமுலு அவர்கள் சாகும்வரை உண்ணாவிரத்தை மேற்கொண்டு உயிர் தியாகம் செய்தபின் ஆந்திர மக்கள் பெரும் போராட்டங்கள் நடத்தினர். வேறு வழி இல்லாமல் ஆந்திர மாநிலத்தைப் பிரித்துகொடுக்க வேண்டிய அவசியம் நேரு அவர்களுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும்மொழிவாரியாகப் பிரித்துக் கொடுக்ககூடிய ஒரு கட்டாயம் வந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் மொழி வழி மாநிலத்திற்கு எதிரான எண்ணம் இருந்தது என்பது அல்ல. ஆர்எஸ்எஸ்இயக்கத்திற்கும் அந்த எண்ணம் இருந்தது. இன்றைக்கும் இருக்கிறது. அப்போது ஆர்எஸ்எஸ் சார்பில் ஒருயோசனை சொன்னார்கள்.

மொழி வழியாக மட்டும் அல்ல, எந்த வழியிலும் மாநிலப் பிரிவினையே கூடாது. இந்தியா முழுவதும் ஒரேவடிவமாக, ஒரே ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் தேசிய ஒற்றுமை என்பதுநிலைக்கும். இந்தியாவை 100 ஜனபாதங்களாகப் பிரித்துவிட வேண்டும். மத்திய அரசு நேரடியாக இவற்றைஆளவேண்டும். மாநில சட்டசபையோ, மாநில அரசாங்கமோ எதுவுமே தேவையில்லை என்று ஆர்எஸ்எஸ்உறுதியாகச் சொன்னது.

தமிழகத்தில் விழுந்த சம்மட்டி அடி:

இதற்கு பதில் நேரு அவர்கள் ஒரு யோசனை சொன்னார். மொழிவாரியாக பி>ப்பதை விட இந்தியாவை 5 பெரியமாநிலங்களாக ஆக்கிவிடலாம் அதற்கு தட்சிணப் பிரேதேசம் என்று கூறலாம் என்றார். இதனால் மொழிஉணர்வே இருக்காது என்று நேரு நினைத்தார்கள். இதற்காக தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய மூன்று முதல்அமைச்சர்களையும் அழைத்தார்.

அப்போது முதல்வராக இருந்த காமராசர், தட்சிணப் பிரதேசம் என்பது தமிழர்கள் கழுத்தில் மாட்டப்படுகின்றசுருக்கு என்று சொன்னார். இந்திட்டத்திற்கு பெரியார் அவர்களும், பெருத்தலைவர் காமராசர் அவர்களும்,அறிஞர் அண்ணா அவர்களும், சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களும், ஜீவா அவர்களும் எதிர்ப்பு தெரிவித்துபோராட்டம் செய்தனர்.

குப்பைக்குப் போன திட்டம்:

அதனால் அன்று முதல் அமைச்சராக இருந்த காமராசர், நேரு அவர்களிடம் சொன்னார்கள். நீங்கள் எனக்குதலைவர், நீங்கள் சொன்னபடி நான் கேட்க வேண்டியது தான். ஆனால் இந்த முதல்வர் நாற்காலியிலே உட்கார்ந்துகொண்டு நான் அதை செய்ய முடியாது.

நான் பதவி விலகுகிறேன். வேறொரு முதல்வர் வைத்துகொண்டு இந்திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்றார்.இதன் விளைவாக அந்த திட்டம் குப்பைக் கூடைக்குப் போயிற்று. இதனால் மொழிவழியாக மாநிலங்களைப்பிரித்து விடாமல் செல்வதற்கான அந்த சதி அன்றைக்கு முறியடிக்கப்பட்டது.

மாநில அரசுகள் அமைந்ததற்குப் பின்னால், யாருக்கு எந்த பகுதி சொந்தம் என்பது பற்றி எல்லாம் உரிமைப்போராட்டங்கள் தொடங்கின. சென்னை நகரம் ஆந்திராவைச் சேர்ந்தது, மதராஸ் மனதே என்று ஆந்திரங்கள்போராடினார்கள். 1920 ஆம் ஆண்டிலேயே ஆந்திர மாநிலம் அமைக்கப்படவேண்டும் என்பதற்காக ஆந்திரமகாசபை என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாகி ஒன்று பட்டு ஆந்திர மாநிலம் வேண்டும் என்று குரல்கொடுத்தார்கள்.

திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானங்களாகவும், மலபார் மாவட்டம், சென்னை மாகாணத்திலேயும் ஆக முன்றுபகுதிகளாகப் பிரிந்து கிடந்த மலையாளிகள் கேரள சமாஜம் என்ற பெயரிலே ஒரு அமைப்பை நிறுவி, எந்தக்கட்சியை சேர்ந்த மலையாளியாக இருந்தாலும் அதிலே ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு நின்றார்கள். ஆனால்துரதிருஷ்டவசமாக நம்முடைய தமிழ்நாட்டில் அப்படி ஒரே அமைப்பின் கீழ் தமிழர்கள் ஒன்று பட்டுநிற்கவில்லை.

இராஜாஜியின் உறுதி:

சென்னை மாகாணத்தில் முதல்வராக இருந்த ராஜாஜி அவர்கள் சென்னை தமிழர்களுக்கு தான் சொந்தம் அதைஆந்திரவுக்கு விட்டு கொடுக்க முடியாது. அப்படி சென்னையை மாகாணத்தை ஆந்திர தலைநகரமாக மாற்றினால்இந்த கடிதத்தை என்னுடைய ராஜினாமா கடிதமாக வைத்துக் கொள்ளலாம் என்று நேருவுக்கு கடிதம் எழுதினர்ராஜாஜி.

பெரியாரும், ராஜாஜியும் இருவரும் இரு துருவங்களாக அரசியல் நடத்தினார்கள். ஆனால் சென்னை நகரம்தமிழர்களுக்கு சொந்தம் என்ற வகையிலே இரண்டு பேரும் ஒன்றுபட்டு செயல் பட்டார்கள். அன்றைக்குமாபொசி அவர்கள் தலைமையில் அண்ணா, ஜீவா அவர்கள் இணைந்து தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்காப்போம் என போராடினார்கள்.

நெருக்கடியான நேரத்தில் சென்னை நமக்கா, ஆந்திராவுக்கா என்று வந்தபோது அனைத்து தலைவர்களும் ஒன்றுகூடி போராடியதால் சென்னை நகரம் நமக்கு மிஞ்சியது.

ம.பொ.சி.போராட்டம்:

வடக்கு எல்லையில் வடவேங்கடத்தையும், அதோடு திருத்தணியும் நாம் பறிகொடுத்தோம். அப்போது மபொசி,பெரும் போராட்டம் நடத்தி திருத்தணியை மீட்டார். இந்தியாவிலேயே எல்லை காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுசிறை சென்று உயிர் இழந்தவர்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம். அத்தனை தியாகிகளையும் நினைவு கூர்ந்து நின்றுசெலுத்த வேண்டிய நாள் தான் இந்த நாள்.

என்னுடைய நண்பர் காந்தி அவர்கள் ரொம்ப வருத்துடன் சொன்னார். எவ்வளவு மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டிய ஒரு நாள் இது. எவ்வளவு ஒற்றுமையுடன் தமிழர்கள் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டு நன்னாள்இது. இதில் கூட வேறுபட்டு நிற்கக்கூடிய நிலை வந்து இருக்கிறதே என்று வருத்தப்பட்டார்.

அன்றைக்கு இருந்த தலைவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்துவதற்கு இன்று இல்லை. அவர்களின் பெயர்களைசொல்லிக்கொண்டு இருப்பவர்கள் தான் இன்று பிளவுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்திய விடுதலையின் பொன்விழாக் கொண்டாட்டங்கள், குடியரசுக் கொண்டாட்டங்கள் எல்லாம் நடந்தன. அந்தவிழாவிற்கு இந்திய அரசு அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒரண்டுக்கு முன்பே அழைத்து பேச்சு நடத்தி,விழாவிற்கான திட்டம் வகுத்து பொன்விழாக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. அதைப் போல வைகோ அவர்கள்சொல்லி நண்பர் ராதாகிருஷ்ணன் விழா நடத்துகிறார் என்று அறிவிப்பு வந்தவுடன், அரசும் அவசர அவசரமாகவிழா நடத்துவது சரியல்ல.

இப்படியா அரசு விழா?

அனைத்து கட்சிகளையும் கூட்டி நடத்த வேண்டிய அரசு விழா. இப்படி கூட்டணிக் கட்சிகளை வைத்துக் கொண்டுநட்ததுவதா என்ன? இதை நான் குற்றம் சாட்டுவதற்காக சொல்லவில்லை. ஆதங்கத்தோடு சொல்கிறேன். இந்தவிழா நடத்துவதில் கூட நம்மால் ஒன்றுபட முடியவில்லை என்ற காரணத்தினாலே தான் ராதாகிருஷ்ணன்அவர்கள் இந்த விழா நடத்துவதற்கு முன் வந்தார்.

5,000 ஆண்டுகாலமாக இல்லாத ஒரு நாடு, இந்த 50 ஆண்டுகாலமாகத்தான் உருவாகி இருப்பதைஎண்ணிப்பார்த்தாவது ஒன்றுபடுகின்ற மனப்பக்குவத்தை நாம் இன்னும் பெறவில்லை. இதைப்போல 50ஆண்டுகளுக்கு முன்னால் இப்போதிருக்கும் நம்முடைய தலைவர்கள் இருந்திருப்பார்களேயானால், தமிழகமேஉருவாகி இருக்காது.

ஆனால் தமிழகத்திற்கு பிரச்சனை என்று வந்தபோது அந்தப் பிரச்சனைகளுக்கு அப்பால் எழுந்து நிற்கக்கூடியஅந்த தொலைநோக்குக் கொண்டவர்களாக மறைந்த தலைவர்கள் இருந்த காரணத்தினாலே ஓன்றுபட்டுப்போராடி இந்த தமிழகத்தை நமக்கு பெற்று கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். இந்த தமிழக்ததைக் கட்டி காக்கவேண்டிய மகத்தான கடமை நமக்கு உண்டு?

இன்றைக்கு என்ன நிலை?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக நாம் உரிமை கொண்டாடின காவிரி இப்போது நமக்கு இல்லை. கேரளாபெரியாறு நீர் வீணாக கடலில் போனால் போகட்டும். தமிழகத்திற்கு கொடுக்க மாட்டோம் என்று சொல்கிறது.ஆந்திரா, வறண்டுகிடக்கின்ற பாலாற்றலே ஏதோ மழைக்காலத்திலே வருகின்ற நீரைக்கூட அணைப்போட்டுதடுக்கிறது. இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலை.

பிரிவினையை விதைப்பது யார்?

இலங்கையில் இருந்து தமிழ் ஈழம் பிரிவது எப்போது என்பதை நம்மால் சொல்லமுடியாது. அது வருகின்றபோதுவரட்டும். ஆனால் தமிழகத்தில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். தேசிய ஒருமைப்பாடு பேசிக்கொண்டுஇருக்கிற கர்நாடக, கேரளக் கட்சிகள் இன்றைக்கு தமிழத்திலே பிரிவினை விதை விதைக்கிறார்கள்.

இன்றைக்கு நம்முடைய தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்று சொல்லுகின்ற அண்டை மாநிலங்கள் மீதுநடவடிக்கை எடுப்பதற்கு டெல்லி தயாராக இல்லை. வேட்டி கட்டிக் கொண்டவர்கள் தான் இன்று டெல்லியைஇன்று ஆளுகிறார்கள் என்று பெருமை பேசியவர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள்? என்னசெய்கிறீர்கள் நீங்கள்? எத்தனை நாளைக்கு இந்த நாடகம் நடத்தப்படும்?

பதவிக்காக மிரட்டல்:

அமைச்சரவை அமைக்கும் பொழுது எங்களுக்கு இந்த துறை கொடுத்தால்தான் அமைச்சர் பதவி ஏற்போம்.இல்லாவிட்டால் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு வரமாட்டார்கள் என்று மிரட்டி யார்யாருக்கோ அமைச்சர் பதவிகள் வாங்குவதற்கு காட்டிய துணிவு, வீரம் ஏன் பெரியாறு அணையைஉயர்த்துவதிலே இல்லாமல் போனது?

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தவில்லை என்றால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று சொல்லமுடியவில்லை உங்களால்? சொல்லமாட்டீர்கள். சொல்ல முடியாது. அதற்கான காரணம் டெல்லியில் நீண்ட காலம்நாடாளுமான்ற உறுப்பினர்களாக இருக்கும் வைகோ அவர்களுக்கு தான் தெரியும்.

காமராசர் முதல்வராக இருந்தபோது பெரியாரால் முன்று பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

1. அரசியல் சட்டத்தை எரித்தார்.

2. இந்திய தேசியக் கொடியை எரித்தார்.

3. தமிழ்நாடு இல்லாத இந்திய தேசிய படத்தை எரித்தார்.

ஒரு பக்கம் காமராசர் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தார். ஆனால் தமிழ்நாட்டிற்கு பாதகம் வரும் போது அதைஎதிர்த்தார். இது நம்முடைய காமராசர் ஆட்சியாயிற்றே, பச்சைத் தமிழர் ஆயிற்றே என்று அவர் தயங்கவில்லை.

மூச்சுக்கு மூச்சு பெரியாரால் உருவாக்கப்பட்டவன் என்று சொல்கிறவர்களுக்கு அந்த தைரியம் இல்லை. இதைவிட நமக்கு என்ன இழப்பு எதிர்காலத்தில் வரப்போகிறது?

தமிழ்நாட்டில் ஆற்று நீர் பாசன நிலங்களில் 65% நிலங்கள் காவிரி ஆற்றை நம்பி மட்டுமே பாசனம்செய்யப்படுகிறது. அந்த காவிரி வறண்டு போனால் தமிழகத்தின் நிலை என்ன? பெரியாறு அணையை உயர்ந்தவிட்டால் மதுரையை சுற்றியுள்ள மாநிலங்கள் பாலைவனமாக மாறிவிடும்.

இந்த நெருக்கடி நிலையில் கூட ஒன்று பட்டு போராடும் மனம் இல்லை. அனைவரையும் அரவணைத்துநம்முடைய தமிழர் பிரச்சனைகளிலே ஒன்றுபடுத்தகூடிய ஒரு தலைமை தான் நமக்கு தேவையே தவிர, வெறும்ஆட்சித் தலைமையில் இருந்து எந்தப் பயனும் இல்லை.நம் கடமை:இந்த தலைமுறையினைச் சேர்ந்த நாம், நம்முடைய காலத்திலேயே நம்முடைய தமிழ்நாட்டின் தலையாயப்பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, அடுத்த தலைமுறைக்கு இந்த தமிழ்நாட்டை ஒப்படைத்து விட்டுச் செல்லவேண்டும். நம்முடைய கடமை அது. நாம் செய்த தவறியன் விளைவாகத்தான் இந்த பிரச்சனைகளைமுழுமையாகத் தீர்க்க வேண்டிய கடமை இந்தத் தலைமுறையைச் சேர்ந்த தமிழர்களுக்கு உண்டு. அந்த வகையில்இந்த நன் நாளில், அந்த உறுதியை நாம் எடுப்போம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more