முஷாரபை கட்டிப் போட்ட இந்திய சிறுமிமங்களூர்:
இந்திய-பாகிஸ்தான் உறவை வலுப்படுத்துமாறு வலியுறுத்தி தனக்கு கவிதை அனுப்பிய இந்தியச்சிறுமிக்கு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் பதில் அனுப்பியுள்ளார்.
உன் கவிதையால் நான் மனம் உருகினேன் என எழுதியுள்ளார் முஷாரப்.
கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த தமிழ் சிறுமி சிருஷ்தி (15). கேந்திரிய வித்யாலயாவில் 10ம்வகுப்பு பயிலும் மாணவியான இவர் "குதூட்ஞடிணிண்டிண்" என்ற தலைப்பில் இந்திய-பாகிஸ்தானியகிரிக்கெட் போட்டியையும், இரு நாட்டு உறவுகளையும் வலியுறுத்தி கவிதை வடித்தார்.
இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களும் உடல்கள் வேறாக இருந்தாலும் இதயம் ஒன்று தான் என்றகருத்தை எதிரொலிக்கும் வகையில் கவிதை எழுதினார். அதை முஷாரபுக்கும் அனுப்பினார்.
கிரிக்கெட் விளையாட்டோடு நின்றுவிடாமல் நாம் ஏன் நல்லுறவோடு என்றும் அமைதியோடுவாழக் கூடாது, அந்த இனிய உறவு மலர நீங்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்வைத்திருந்தார் சிருஷ்தி.
இந்தக் கவிதையில் உருகிய பர்வேஸ் முஷாரப் உடனே அச் சிறுமிக்கு பதிலும் எழுதியுள்ளார்.
அதில், உன் கவிதை என்னை மெய் மறக்க வைத்தது, உன் வார்த்தைகளில் நான் மனம்உருகிவிட்டேன். நம் இரு நாட்டு உறவை சீர்படுத்தவும், நாம் அமைதியான வாழ்க்கை வாழவும்என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று உனக்கு உறுதியளிக்கிறேன்.
இளம் வயதில் இவ்வளவு அறிவுத் திறன் கொண்ட உன்னை வாழ்த்துகிறேன். நீ கவிதையில்சொல்லியிருக்கும் வார்த்தைகள் என்னே மிகவும் யோசிக்க வைத்திருக்கின்றன. நம் இரு நாட்டுஉறவும் வலுப்பட நான் எல்லா வகையிலும் முயல்வேன் என உனக்கு மீண்டும் உறுதியளிக்கிறேன்.
இந்த நல்ல பணியை நீ தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். உன் எதிர்காலம் சிறக்க என் தேசத்தின்சார்பில் உன்னை வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் முஷாரப்.
குண்டுகளுக்கும் அசையாத ஒரு முரட்டு ஜெனரலை ஒரு கவிதையால் கட்டிப் போட்ட பெரும்மகிழ்ச்சியில் இருக்கிறார் சிருஷ்தி.
சிருஷ்திக்கு கவிதை புதிதல்ல. பல சர்வதேச கவிதைப் போட்டிகளில் இவரது கவிதைகள்வாசிக்கப்பட்டிருக்கின்றன. சில விருதுகளையும் தட்டி வந்திருக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications