Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜப்பானில் புத்த மதம் பரப்பிய தமிழர்

Subscribe to Oneindia Tamil

ஜப்பானின் அரச மதமாக அறிவிக்கப்பட்டிருப்பது புத்த மதமே. ஜப்பானிய மக்களும்பெரும்பாலும் புத்தமதத்தினராகவே இருக்கின்றனர் என்ற போதும் புத்த மதம் இங்குபல பிரிவுகளாக இருக்கிறது.

மிக புகழ் பெற்ற சென் பிரிவு உட்பட, ஜோதேயி உட்பிரிவு, ஜோதேயி உஷின்சிசுபிரிவு, நச்சிரின் பிரிவு என சீன நாட்டிலிருந்தும் கொரிய நாட்டிலிருந்தும் பரவிய புத்தமதப் பிரிவுகள் ஜப்பான் நாட்டில் உண்டு.

காஞ்சிபுரத்தைச் சேந்த புத்தபிட்சுவான போதி தருமர் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் சீனாசென்று புத்த சமயத்தைப் பரப்பினார். பிறகு அங்கிருந்து ஜப்பான் தேசத்திற்கும்சென்று அங்கும் சமயப் பிரச்சாரம் செய்தார். சீனாவிலும், ஜப்பானிலும் இவருக்குக்கோயில்கள் கட்டப் பட்டுள்ளன. இவர் பரப்பிய புத்த மதப்பிரிவு சென் எனஜப்பானில் அழைக்கப்பட்டது. சீனர்கள் இதை சான் என அழைத்தார்கள்.

Pothitharumarஇவை போக, ஜப்பானின் பழமையான மதமான ஷின்டோவும் இன்னமும்உயிர்ப்புடனேயே இருக்கிறது. ஷின்டோ மதத்திற்கென, உருவாக்கியவரோ அல்லதுவழிகாட்டு நூலோ கிடையாது. அடிப்படையில் மிகுந்த நேர்மறை சிந்தனை கொண்டமதமான ஷின்டோவை பொருத்தவரையில் நல்லது கெட்டது என்று எதுவும்கிடையாது. யாரும் முழுமையானவர்கள் கிடையாது. மக்கள் அனைவரும்அடிப்படையில் நல்லவர்கள். தீயவை எல்லாம் கெட்ட ஆவிகளினாலேயேநடக்கின்றன. இது தான் அந்த மதத்தின் கோட்பாடு.

ஷின்டோவின் கடவுள் கமி என்று அழைக்கப்படுகிறார். காற்று, மழை, மலை,மரங்கள், ஆறுகள் போன்றவற்றின் வடிவம் எடுக்கிற புனித ஆவிகளே கமிகள்.மக்கள் இறந்த பிறகு கமி ஆகிவிடுகின்றனர். அவர்களை அவர்களது குடும்பத்தினர்மூத்தோர் கமி என்று வழிபடுகின்றனர். சில சிறப்பான கமிகள் ஷின்டோகோயில்களில் கூட இடம் பெறுகின்றனர்.

பெரும்பாலான ஷின்டோ சடங்குகளும், விழாக்களும், கமிகளுக்கு படையல்செய்வதன் மூலமும், பிற வழிபாட்டு முறைகளின் மூலமும் கெட்ட ஆவிகளைவிலக்கி வைப்பதற்காகவே நடத்தப்படுகின்றன.

பழமையான மதங்களுக்கேயுரிய மூட நம்பிக்கைகள், சடங்குகள் ஷின்டோமதத்ததிலும் நிறைய உள்ளன. ஷின்டோ வழிபாட்டு தலங்களில் நல்ல ஆரோக்கியம்,பயண பாதுகாப்பு, படிப்பு, வணிக வெற்றி போன்ற பலவற்றிற்கும் தாயத்துப் போன்றபொருட்கள் கிடைக்கின்றன.

அவற்றை வாங்கி வைத்தால் நினைத்தவை ஈடேறும் என மக்கள் நம்புகின்றனர்.

புத்த மதத்தினர் ஷின்டோ வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுபவர்களாகவே இருக்கின்றனர். ஷின்டோவின் கடவுளான கமிகளை புத்தரின் வடிவங்களாகவேபெரும்பாலான புத்தமதத்தினர் கருதுகின்றனர்.

புத்த கோயில்களில் ஷின்டோ மதத்தின் தாக்கங்கள் நிறைய இருக்கின்றன.

புத்தமதம், ஷின்டோ இரண்டையும் பின்பற்றுபவர்கள் ஒரே மக்கள் என்பதால்,இவ்விரண்டு மத வழிபாட்டு றைகளும் பிரித்து காண இயலாதவாறு ஒன்றோடு ஒன்றுகலந்து இருக்கின்றன.

ஷின்டோ மதத்தின் திருவிழாக்கள், புத்தர் கோயில்களிலும் நடைபெறுகின்றன.

புத்த மதத்திற்குரிய சிறப்பு வழிபாடுகள் ஷின்டோ கோயில்களிலும்நடைபெறுகின்றன.

நம் நாட்டைப் போலவே இங்கும் பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன. குறிப்பிட்டகோயில்களுக்கான சிறப்பு திருவிழாக்களும் உண்டு. புத்தாண்டு பிறக்கும் போதுகோயிலில் இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

முதல்நாள் மாலையிலிருந்தே கோயில்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர்.கோயிலில் இருந்து சற்றுத் தொலைவில் கயிறு கட்டி அனைவரும் தடுத்துநிறுத்தப்படுகின்றனர். பின்னர் பகுதி பகுதியாக அனுமதிக்கப்படுகின்றனர்.

அனுமதிப்பதற்காக கயிறு அவிழ்க்கப்பட்டவுடன் ஒருத்தரை ஒருத்தர்தள்ளிக்கொண்டும், மிதித்துக் கொண்டும் மக்கள் கோயிலை நோக்கி ஓடுவதைகாணுவது மிக வேடிக்கையாக இருக்கிறது.

கோயிலுக்குள் நுழைந்த பிறகு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உள்ளேஇருக்கலாம். அதற்கு கட்டுப்பாடு இல்லை. கோயிலுக்குள் நுழைந்தவுடன் முதலில்ஒரு இடத்தில் ஒரு தொட்டி நிறைய நீர் இருக்கிறது. அதில் தொண்டிகளும்இருக்கின்றன.

மக்கள் தொண்டி மூலம் நீரை எடுத்து கை, முகம், கழுவிக் கொள்கின்றனர். பின்னர்அந்நீரை சிறிது அருந்தவும் செய்கின்றனர். பின்னரே கோயிலுக்குள் செய்கின்றனர்.

சந்நதிக்கு நேர் எதிரே ஒரு நெருப்புக் குண்டம் இருக்கிறது. அதிலிருந்து வரும்புகையை மக்கள் கண்ணில் ஒத்திக் கொள்கின்றனர் - நம் கோயில்களில் தீபத்தைவணங்குவது போல. வெளியே அத்தனை ஆர்ப்பாட்டங்கள் இருந்த போதும்சந்நதிக்குள்ளே மிகுந்த அமைதி நிலவுகிறது. உள்ளே யாரும் பேசுவதில்லை.மதகுருக்களின் ஓதும் குரலும் மணியோசையும் மட்டுமே ஒலிக்கின்றன.

இவை தவிர வேண்டுதல் முறைகள் பலவும் உள்ளன. சீட்டுக் கட்டி விடுவது,பொம்மை செய்து வைப்பது போன்ற பல வேண்டுதல் முறைகள் உள்ளன.

புத்தாண்டு அன்று நம் ஊரில் கிடைக்கும் திருஷ்டி பூசணி போன்ற வடிவத்தில் சிகப்புநிறத்தில் ஒரு பொம்மை விற்கப்படுகிறது. அப்பொம்மைக்கு கண்கள் கிடையாது.மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அதை வாங்குகின்றனர்.

அதை வாங்கி நம் விருப்பம் ஒன்றை மனதில் நினைத்து பொம்மைக்கு ஒரு கண்மட்டும் வரைந்து வீட்டில் வைத்தால் அடுத்தப் புத்தாண்டிற்குள் அவ்விருப்பம்நிறைவேறும் என்பது நம்பிக்கை. அப்படி நிறைவேறியவுடன் மறு கண்ணையும்வரைந்து போயிலில் கொண்டு வந்து அப்பொம்மையை போட்டுவிட வேண்டும்.கைக்கு அடக்கமான அளவிலிருந்து ஆளுயர அளவு வரை அப்பொம்மைகள்கிடைக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இரண்டாவது திங்கள் கிழமை செஜின் நோஎனும் விழா கொண்டாடப் படுகிறது. 1999-ஆம் ஆண்டு வரை ஜனவரி 15-ஆம் நாள்கொண்டாடப்பட்டு வந்த இவ்விழா மக்களின் வசதிக்காக 1999-ஆம் ஆண்டிலிருந்துஜனவரி மாதம் இரண்டாவது திங்கள் கிழமையன்று கொண்டாடப்படுகிறது.

அன்று அந்த வருடம், 20 வயதான ஆண்களும் பெண்களும் அவர்கள்பெரியவர்களாக அங்கீகரிக்கப்படும் நாள். அன்று பெண்கள் தங்களின் பாரம்பரியஉடையான கிமோனோவிலும், ஆண்கள் பெரும்பாலும் புத்தம் புதிய சூட்டிலும் வலம்வருவர். அந்த உடையில் கோயிலுக்கு செல்வது மிகவும் சிறப்பானதாகக்கருதப்படுகிறது.

நம் ஊரில் புதிதாக சேலை அணிந்த பெண்கள் ஒரு வித வெட்கத்தோடு வருவதுபோல, புதிதாக கிமோனோ அணிந்த பெண்கள் ஒரு வித பெருமை, வெட்கம்எல்லாம் கலந்த கபாவனைகளோடு வலம் வருவதைப் பார்ப்பதே கொள்ளை அழகு.

-தென் செய்தி

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+