• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போன்ல சிரிக்கலாம்

By Staff
|

(பொழுது போகலைன்னா ஃபோன்ல இப்படி எல்லாம் பேசலாமுங்களா? - ஒரு கற்பனை)

  • "ஹலோ. என்ன இன்னும் யாரும் கல்யாணத்துக்காக ஊருக்கு கிளம்பளையா? சீக்கிரம் எல்லோரும் கிளம்புங்க சார். அப்புறம் பஸ்ஸை மிஸ்பண்ணிடப்போறீங்க.
  • "தோ கிளம்பிட்டோம். ஆமாம், நீங்க யாரு சார் பேசறது?

    "நான் இந்த ஏரியா திருடன் சார்"

  • "ஹலோ. அனந்தராமன் சார் வீடுங்களா?
  • "இல்லீங்க. இது அனந்தராமன் சார் ஃபோனுங்க"

  • "ஹலோ. வைத்தியலிங்கம் சார் வீடுங்களா?
  • "கன்ஃபர்ம்டா தெரியலீங்க. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. வீட்டு பத்திரத்தை பார்த்துட்டு சொல்றேன்"

  • "ஹலோ. நாங்க கோயம்புத்தூர்ல இருந்து பேசறோம்ங்க"
  • "அப்படீங்களா. நாங்க சென்னையிலிருந்து கேட்கிறோம்ங்க"

  • "ஹலோ. ஏஜிஸ் ஆஃபீஸூங்களா?"
  • "தெரியலீங்க. நான் இன்னைக்குத்தான் வேலைக்கு சேர்ந்திருக்கேன்"

  • "ஹலோ. மன்னாரன் கம்பெனிங்களா? உங்க ஸ்டெனோ ஸ்டெல்லா கிட்ட கொஞ்சம் பேசனும்"
  • "பார்க்லியா பீச்லயா?"

  • "ஹலோ. 98410 555555வா ?"
  • "இல்லை. இது Nokia 6160"

  • "ஹலோ. 555 6274ங்களா?"
  • "ஆமாங்க"

    "ரொம்ப நேரமா 555 6275 க்கு ட்ரை பண்றோம். லைன் கிடைக்கல. அதான் அதுக்கு அடுத்த நம்பரான உங்களுக்கு ஃபோன் பண்றோம். உங்க கிட்ட விஷயத்தை சொன்னா ஒரு தபா ஓடிப்போய் அவங்க கிட்ட சொல்லிட்டு வந்துடுவீங்களா?"

  • "ஹலோ. 555 5252 ங்களா?"
  • "ஆமாங்க. உங்களுக்கு என்ன வேணும்ங்க"

    "ஒண்ணும் இல்லீங்க. எங்க ஃபோன்ல 5ம் 2ம் வேலை செய்யுதான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேனுங்க"

  • "ஹலோ. அப்போலோ ஆஸ்பத்திரியா. உங்ககிட்ட காலுக்கு வைத்தியம் பார்க்கிற கால் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் யாராவது இருக்காங்களா?"
  • "இருக்காங்க. என்ன பிராப்ளம்ங்க"

    "எங்க ஃபோனுக்கு அடிக்கடி கால் வருதுங்க.

  • "ஹலோ. நடிகை அல்பா ரெட்டியா? உங்களை ஒரு பேட்டி எடுக்கலாமா?"
  • "முடியாதுங்க. இன்னைக்கு நான் ஸ்டிரிக்ட் மவுனவிரதத்துல இருக்கிறேங்க"

  • "ஹலோ. ராங் நம்பரா?"
  • " ??? "

    - சம்பத்(sampath@sampath.com)

    படைப்புகளை அனுப்ப:

    கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

    படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.



     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X