ஒகேனக்கல் மண்ணை இழக்க மாட்டோம்!
![]() காவிரி ஆற்றில் தமிழர்களுக்கு உள்ள உரிமையை எப்போதும் மறுத்துவரும் கர்நாடகம், இந்த ஆண்டு பெருமளவு தண்ணீரைஅனுப்பி வைத்தற்குக் காரணம் அதன் பெருந்தன்மையோ, ஞாயத்தைப் புரிந்துகொண்ட நிலைப்பாடோ அல்ல. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் இவ்வாண்டு ஏராளமான மழை பெய்துவிட்ட காரணத்தால் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளவழியில்லாமல் இங்கே அனுப்பி உள்ளது. அதன் லம் அங்கே வெள்ளம் வராமல் தடுத்துக்கொள்வதே கர்நாடகத்தின் திட்டம். கிருஷ்ணசாகர் அணை என்பது மிகப்பெரிய அணை. எளிதில் அந்த அணை நிறைந்துவிடாது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகுஇப்போதுதான் நிறைந்துள்ளது. இந்த நிலையைக் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒகேனக்கல் பகுதியைக் கைப்பற்றி, அதற்குச் சற்று முன்பு மேகதாது அணை ஒன்றைக் கட்டி விட்டால், ஒட்டுமொத்தமாகத்தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வருவதைத் தடுத்துவிடலாம். இந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் ஒகேனக்கல் சிக்கலைப்புதிதாகக் கர்நாடகம் கையில் எடுக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒருமுறை இப்படியொரு முயற்சியில் கர்நாடகம் இறங்கியது. அப்போது அங்கு குண்டுராவ்முதலமைச்சராக இருந்தார். ஒகேனக்கலிலிருந்து 15 கி.மீ. தொலைவில் மேகதாதுத் திட்டம் அமையும் என்றும், அதனைஉடனடியாகத் தொடங்க இருப்பதாகவும் அவர் அறிவித்தார். அப்போதிருந்த தமிழக அமைச்சரவையும், சட்டமன்றமும் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. அனைத்துக் கட்சிகளும்ஓரணியில் நின்று அதனை எதிர்த்தன. தமிழக மக்களிடம் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. அதன் விளைவாக அத்திட்டத்தை அன்றுகுண்டுராவ் கைவிட்டார். மீண்டும் இன்று கர்நாடகம் அதைக் கையில் எடுக்கிறது. எந்த ஆவணங்களும் சான்றுகளும் இல்லாமல், ஒகேனக்கல் எங்களுக்கே சொந்தம் என்று கர்நாடகம் சொல்லுவது எவ்வளவுபெரிய மோசடி!. பொய்யை மெய்யாக்குவதற்கு கன்னட வெறியர்களின் இயக்கங்களும், கர்நாடக அரசும் மிக விரைவாக வேலைசெய்கின்றன. தங்கள் கொடியை நாட்டுவதற்கு செங்கற்களோடும், சீமெந்தோடும் ஒகேனக்கல் பகுதியில் அவர்கள் குவிந்திருக்கிறார்கள். தமிழகஅரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் அதுபற்றிக் கவலை ஏதுமின்றி ஆழ்ந்த நித்திரையில் மூ-ழ்கி உள்ளார்களோ என்றுஎண்ணத் தோன்றுகிறது. தமிழகத்தின் ஊடகங்களுக்குத் திரைப்பட நடிகையைப் பற்றிய செய்திதான் பெரிதாய் இருக்கிறதே தவிர, இருக்கும் மண்ணையும்இழக்கப்போகும் அவலம் பெரிதாய்ப் படவில்லை. கர்நாடகம் ஒகேனக்கல் பகுதியைக் குறிவைப்பதற்கு வேறு சில பொருளியல் காரணங்களும் உள்ளன. ஏறத்தாழ 45ஆண்டுகளுக்கு முன்னால் ஒகேனக்கல் மின் உற்பத்தித் திட்டம் என ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. 25-8-1961 அன்று மத்திய நீர் மற்றும் மின்சக்திக் குழுவிற்கு, கர்நாடகத்தில் உள்ள சிம்சா மின்நிலையத்திற்குக் கீழே ஒகேனக்கல்மின் உற்பத்தி நிலையம் ஒன்றைத் தொடங்குவதற்கான திட்டத்தைத் தமிழக அரசு அனுப்பி வைத்தது. அத்திட்டத்தின்படி காவிரியில் இரண்டு அணைகள் கட்டப்படும். முதலாவது அணை சுந்தர்பெட்டா மலையில் அமையும். அந்தஅணையின் உயரம் ஆற்றுப் படுகையில் இருந்து 449 அடி ஆகும். அந்த அணையின் அடிவாரத்தில் ஒவ்வொன்றும் 100மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 6 மின் நிலையங்கள் அமைக்கப்படும். இரண்டாவது அணை ஒகேனக்கலுக்கு அருகில் அமையும். இந்த அணையின் அடிவாரத்தில் ஒவ்வொன்றும் 50 மெகாவாட்உற்பத்தி செய்யும் திறன்படைத்த 4 மின் நிலையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதோடு, இதனால் ஏற்படும் பயன்இரண்டு மாநிலங்களுக்கும் உரியதாக இருக்கும். நீரிலிருந்து இம்மின்சார உற்பத்தி அமைவதால், நிலக்கரி பெருமளவில்மிச்சமாகும். அத்திட்டத்தின்படி கட்டப்படும் இரண்டு அணைகளில் தேங்கும் நீரும், மின்சார உற்பத்திக்கு மட்டுமே அன்றி வேறு பாசனநோக்கம் எதற்கும் பயன்படக்கூடாது என்பதும் திட்டத்தின் ஒர் அங்கமாகும். இந்த அணைகள் கட்டப்படுவதால் வெள்ள அபாயம் தடுக்கப்படுகிறது. அதனைச் சுற்றுலாப் பகுதியாக ஆக்குவதன் மூலம்அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இத்தனை நன்மைகள் கொண்ட இத்திட்டம் இன்னும் நிறைவேற்றப் படாமலேயே உள்ளது.அத்திட்டத்தை இப்போதாவது நாம் வலியுறுத்திப் பெற வேண்டும். நம்டைய அலட்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒகேனக்கல் பகுதியைக் கைப்பற்றுவதன் மூலம் அரசியல் பொருளியல்லாபங்களை ஈட்டுவதற்கு கர்நாடகம் முயற்சி செய்கிறது. இது பகற் கொள்ளையைக் காட்டிலும் கொடுமையானது. தமிழகமே திரண்டெழுந்து இச் சதியை முறியடிக்க வேண்டும்.தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் இத்தருணத்தில் ஓரணியில் திரண்டு நின்று போர்க்குரல் எழுப்ப வேண்டும். ஏற்கனவே தமிழகத்தின் வளமான நிலப்பகுதி பலவற்றை நாம் இழந்து நிற்கிறோம். இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை.எல்லோர் கவனமும் இதிலே திரும்பட்டும். இயக்கங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து கிளம்பட்டும். ஒகேனக்கல் என்பது தமிழக மண். ஒரு நாளும் அதை இழக்கச் சம்மதியோம். - சுப.வீரபாண்டியன் ([email protected]) படைப்புகளை அனுப்ப: கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications