தமிழ்நாட்டில் தெலுங்கு ஆட்சி மொழி:கொக்கரிக்கும் வெங்கையா
- தென் செய்தி கட்டுரை
""தமிழ்நாட்டிலும், கருநாடகத்திலும், ஒரிசாவிலும் தெலுங்கு ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும். இம் மாநிலங்களில் வாழும்தெலுங்கு மக்கள் இதற்காகப் போராட வேண்டும் எனப் பா.ஜ.க. முன்னாள் தலைவர் வெங்கைய்யா நாயுடு அறைகூவல்விடுத்துள்ளார்.
உலகத் தெலுங்குக் கூட்டமைப்பின் ஆறாவது மாநாட்டில் சிறப்புரையாற்றிய வெங்கைய்யா நாயுடு பேசியதாவது:-
""அகில இந்திய வானொலி, தூர்தர்சன் தொலைக்காட்சி ஆகியவற்றில் தரமான தெலுங்கு நிகழ்ச்சிகளுக்கு நேரம்ஒதுக்கப்படவேண்டும்.
தெலுங்கு-கன்னட மொழிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளாகும். உணர்ச்சிப்பூர்வமாக இரண்டும்பிணைக்கப்பட்டுள்ளன. இரு மொழிகளின் எழுத்துக்களுக்கிடையே வேறுபாடு அதிகமில்லை.
இருமொழிகளும் தோன்றிய வரலாறு ஒரே மாதியானவை, இருமொழிகளுமே இலக்கிய வளமிக்கவை யாகும் என்றார்.
இம் மாநாட்டில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ஆதிகேசவலு,
""கன்னடம் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கும் உரிய ஒரே மாதிரியான எழுத்து முறையை முன்னாள் தலைமையமைச்சர்பி.வி.நரசிம்மராவ் வடிவமைத்து உள்ளார். இதை நடைமுறைப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளை சத்ய சாய்பாபா செய்துவருகிறார். இது குறித்த நூல் ஒன்று விரைவில் வெளியிடப்படும் என்றார்.
வெங்கையா நாயுடுவின் பேச்சுக்குக் கன்னடர் நடுவில் கடும் எதிர்ப்புத் தோன்றியுள்ளது.
கன்னட சாலுவாலிகா இயக்கத் தலைவரான வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஆயிரக்கணக்கான கன்னடர்கள் கூடி கருநாடகசட்டமன்றம் முன்பாகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
""கருநாடகத்தில் தெலுங்கு மொழியை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று கூறிய வெங்கையா நாயுடு மன்னிப்புக் கேட்கவேண்டும் என ஆர்ப்பாட்டக் காரர்கள் முழக்கமிட்டனர்.
ஆனால் தமிழ்நாட்டில் எவ்வித எதிர்ப்புக் குரலும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி- தென்செய்தி([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications