தமிழ்ப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்!
- தென் செய்தி
தமிழ்நாட்டில், குறிப்பாகத் தலைநகர் சென்னையில், தமிழைப் பாதுகாப்போம் என சூளுரைத்துப் போராட்டம் நடத்தி வரும்தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்திற்கு கனடா வாழ் தமிழர்கள் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களுக்குத்தான் தமிழ் மொழியில் படி, தமிழில் பேசு, தமிழ் மொழியில் நீதிமன்ற வழக்குகளை நடத்து, திருக்கோயில்களில்தமிழில் அர்ச்சனை செய், தமிழ்மொழியில் பெயர்ப் பலகைகளை எழுதி வை, தமிழ் மொழியில் தயாரிக்கும் திரைப் படங்களுக்குத்தமிழில் பெயர் வை என்று கேட்டு அனைத்துத் தளங்களிலும் போராட வேண்டி உள்ளது.
இப்படியான போராட்டம் கர்நாடகத்தில், ஆந்திராவில், கேரளாவில் தேவையற்றதாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள எந்தமாநிலப் படமாக இருந்தாலும், அது அந்த மாநிலத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான்தமிழ்ப்படங்களில் தமிழ்நாட்டைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் பிரதிபலிக்கப்படுகிறது.
உண்மை என்னவென்றால், மயிலே மயிலே இறகு போடென்றால் அது இறகு போடாது. இந்த ஆங்கிலப் பெயர் கொண்டதிரைப்படங்களைப் புறக்கணிப்பதன் மூலமே கமலகாசன், சூர்யா போன்றவர்களுக்குப் பாடம் படிப்பிக்கலாம்.
கனடா இன்று தமிழ்த் திரைப்படங்களுக்கு நல்ல வருவாய் தேடிக்கொடுக்கும் சந்தையாகக் கருதப்படுகிறது. தயாரிப்புச் செலவில்கணிசமான பங்கை இங்கு விற்பனை செய்வதன் மூலம் தயாரிப்பாளர்கள் ஈடு செய்து விடுகிறார்கள் என்று கருதப்படுகிறது.
தமிழ்ப் பாதுகாப்பு அமைப்பு நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மும்பை எக்ஸ்பிரஸ், பி.எப்.திரைப்படங்கள் உட்பட ஆங்கிலப் பெயர் கொடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களை இங்கு திரையிடக்கூடாது என திரையரங்குஉரிமையாளர்களுக்குப் பணிவாக வேண்டுகோள் விடுக்க எண்ணியுள்ளோம். மீறி அவர்கள் இப்படங்களைத் திரையிட்டால்அவற்றைப் புறக்கணிக்குமாறு பொது மக்களைக் கேட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்ப் பாதுகாப்பு அமைப்பு முன்னெடுக்கும் அனைத்துப் போராட்டங்களுக்கும் எமது ஆதரவு எப்போதும் உண்டு என மீண்டும்தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நன்றி- தென்செய்தி([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications