கர்நாடக இசை சாப்ட்வேர்!
சென்னை:வளரும் கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்காக புதிய சாப்ட்வேர் ஒன்றைசென்னையைச் சேர்ந்த வாய்ஸ் ஸ்னாப் என்ற சாப்ட்வேர் நிறுவனம்வடிவமைத்துள்ளது.
வாய்ஸ் ஸ்னாப் நிறுவனம் தயாரித்துள்ள சாப்ட்வேருக்கு வாய்ஸ் ஸ்னாப் விஎஸ்2என்று பெயரிடப்பட்டுள்ளது. கர்நாடக சங்கீதத்தைக் கற்று வரும் வளரும்கலைஞர்களுக்காக இந்த விசேஷ சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக இசையின் ஒவ்வொரு நிலையிலும் தாங்கள் எந்த அளவுக்கு தேர்ச்சிஅடைந்துள்ளோம் என்பதை சுயமாகவே அறிந்து கொள்ள இந்த சாப்ட்வேர் வளரும்கலைஞர்களுக்கு உதவுகிறது.
இதுகுறித்து வாய்ஸ் ஸ்னாப் நிறுவன தலைமை செயல் அதிகாரி கணேஷ் பத்மநாபன்விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கர்நாடக இசையைக் கற்றுக் கொள்ள விரும்பும்அனைவருக்கும் இது ஒரு வரப் பிரசாதமாகும்.
சரளி வரிசை, ஜண்ட வரிசை, அலங்காரம், கீதம், ஸ்வரஜதி, வர்ணம், கீர்த்திகள்,ஜாவளிகள், ராக ஆலாபனை, நிரவளி ஆகியவற்றை இதன் மூலம் கற்றுக் கொள்ளவும்முடியும்.
இந்த வசதியைப் பெற ஒரு கம்ப்யூட்டர், இன்டர் நெட் இணைப்பு மற்றும் வாய்ஸ்ஸ்னாப் விஎஸ்2 சாப்ட்வேர் ஆகியவை தேவை.
தற்போது வாய்ஸ் ஸ்னாப் விஎஸ்2வின் இலவச பதிப்பு கிடைக்கிறது.
இந்த சாப்ட்வேரைப் பயன்படுத்தி தங்களது குரலை பதிவு செய்து அனுப்ப வேண்டும்.எந்த அளவுக்கு அந்தக் கலைஞர் தேறியிருக்கிறார் என்ற முடிவு அவருக்கு அனுப்பிவைக்கப்படும்.
இன்னும் தேர்ச்சி, திறமை பெற என்னென்ன பயிற்சி தேவை, ஆலோசனை,திருத்தங்கள் உள்ளிட்டவையும் அந்தக் கலைஞருக்கு தெரிவிக்கப்படும் என்றுகூறியுள்ளார் பத்மநாபன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications