குவைத்தில் தமிழ் முஸ்லீம் குடும்பங்கள் சந்திப்பு
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த 'ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புச் சொற்பொழிவு' மற்றும் 'தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி' நடந்தது.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பில் 14-12-2007 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில் இஷா தொழுகையைத் தொடர்ந்து குவைத், ஸால்மியா பகுதியில் உள்ள சங்கத்தின் மீடியா குழு உறுப்பினர் காயல்பட்டிணம் ஜனாப். முஹம்மது முஹைதீன் அவர்களின் இல்லத்தில் ' ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புச் சொற்பொழிவும், தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி' யும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் அஷ்ஷைக் ஏ. ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ ஹழ்ரத் தலைமையேற்க, இளவல் எஸ். அல் அமீன் அவர்கள் கிராஅத் (இறைமறை திருக்குர்ஆன் வசனங்கள்) ஓத, சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப். எம். முனீர் அஹ்மத் அவர்கள் வரவேற்புரையாற்ற நிகழ்ச்சி துவங்கியது.
நிகழ்ச்சித் தலைவர் 'ஹஜ்ஜுப் பெருநாள் , நபி இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தியாக வாழ்க்கை , கஃபாவின் வரலாறு ' என்ற தலைப்பில் தலைமையுரையாற்றிய பின், சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைக் எம்.டி.எம். அஜ்வத் ரைவின்தி லாஹுர் (இலங்கை) ஹழ்ரத், 'இஸ்லாமிய பெண்களின் கடமைகள் மற்றும் நபித்தோழியர்களின் வாழ்வு' என்ற தலைப்பிலும், சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ காரீ அஷ்ஷைக் ஏ.ஆர். முஹம்மது அலீ ரஷாதி ஹழ்ரத் அவர்கள் 'குழப்பவாதிகளின் தோற்றமும், அவர்களை எதிர் கொள்ளும் முறைகளும்' என்ற தலைப்பிலும், சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி ஹழ்ரத் அவர்கள்' இஸ்லாம் கற்றுத் தந்த இனிய குடும்ப வாழ்க்கை' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.
பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிற்றுரையாற்ற, சங்கத்தின் இதழியல் குழு உறுப்பினர் காயல் ஏ. ஹாமித் அபூ மாஜின் அவர்கள் நன்றியுறையாற்ற, சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ அஷ்ஷைக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்கள் துஆ ஓத, இரவு உணவுடன் இரவு 10:30 மணிக்கு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இச்சிறப்பு மிகு நிகழ்ச்சிகளில் குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் இந்திய, இலங்கையைச் சேர்ந்த உலமாக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணியாளர்கள், பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க (K-Tic) நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications