எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் எட்டயபுரத்தில் பாரதி பிறந்த நாள் விழா
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா எட்டயபுரத்தில் கொண்டாடப்படவுள்ளது.
இது குறித்து தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுடர் முருகையா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 14 ஆண்டுகளாக சங்கத்தின் தலைவர் விக்கிரமன் தலைமையில் எட்டயபுரத்தில் பாரதியார் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் டிசம்பர் 9ம் தேதியன்று எட்டயபுரம் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, விழுப்புரம், திருக்கோவலூர், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, நெய்வேலி, பண்ருட்டி, மதுரை, நெல்லை, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து எழுத்தாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
டிசம்பர் 11ம் தேதியன்று எட்டயபுரத்தில் பாரதி வாழ்ந்த இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தல், பாடல்களைப் பாடுதல், கவியரங்கம், பாரதி பணிச் செல்வர் விருது வழங்கல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications